Jun 29, 2024
BY: Anojவீட்டில் இருப்போருக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்துகொடுக்க விரும்பினால், சூப்பரான சுவைக்கொண்ட முட்டை சேமியா பணியாரத்தை முயற்சிக்கலாம். அதன் விரிவான செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
முட்டை - 2; வெங்காயம் - 1; கறிவேப்பிலை - சிறிதளவு; உப்பு - சுவைக்கேற்ப; ப.மிளகாய் - 1; மிளகு தூள் - 1 டீஸ்பூன்; சீரக தூள் - 1 டீஸ்பூன்; கொத்தமல்லி - சிறிதளவு; எண்ணெய் - தேவைக்கேற்ப; சேமியா - 1 கப்
Image Source: istock
முதலில் சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். பின் அவற்றை வடிகட்டி எடுத்துகொள்ளவும்
Image Source: istock
இப்போது ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்
Image Source: pexels-com
அடுத்து, சீரகத் தூள், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
Image Source: istock
இறுதியாக, வேகவைத்த சேமியாவில் 2 கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்
Image Source: x-com
வழக்கமான முறையில் பணியாரம் செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விட வேண்டும்
Image Source: istock
பிறகு, கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பிப்போட்டு வேகவைக்கவும்
Image Source: istock
அவ்வளவு தான், பொன்னிறமாக எடுத்தால் முட்டை சேமியா பணியாரம் ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னியுடன் பரிமாற செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!