[ad_1] சுவையான 'முருங்கைக்காய் வறுவல்' செய்வது எப்படி?

Aug 14, 2024

BY: Anoj, Samayam Tamil

சுவையான 'முருங்கைக்காய் வறுவல்' செய்வது எப்படி?

முருங்கைக்காய் வறுவல்

முருங்கைக்காய் பயன்படுத்தி பல வகையான உணவுகளை சாப்பிட்டுள்ள நிலையில், செட்டிநாடு ஸ்டைலில் முருங்கைக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/foodbyloves

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் - 3; சின்ன வெங்காயம் - 10; தக்காளி - 1; கடுகு - கால் டீஸ்பூன்; மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்; மஞ்சள் - அரை டீஸ்பூன்; உப்பு - சுவைக்கேற்ப; கறிவேப்பிலை - சிறிதளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் அடுப்பில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்

Image Source: istock

செய்முறை படி - 2

அடுத்து, சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 3

பிறகு, நறுக்கிய தக்காளியை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்

Image Source: pexels-com

செய்முறை படி - 4

அடுத்து, மஞ்சள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து கிளற வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 5

தொடர்ந்து, முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கலவையில் சேர்த்து வதக்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 6

அடுத்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி கொதிக்கவிடவும்

Image Source: istock

வறுவல் ரெடி

தண்ணீர் நன்கு வற்றியதும் நன்றாக கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான முருங்கைக்காய் வறுவல் ரெடி. இதனை சூடான சாதத்துடன் பரிமாற செய்யுங்கள்

Image Source: instagram-com/hamshitha-acharya

Thanks For Reading!

Next: காரசாரமான 'காலிஃப்ளவர் ஊறுகாய்' செய்முறை

[ad_2]