[ad_1] சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ‘கடுகு குழம்பு’ செய்முறை!

May 11, 2024

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ‘கடுகு குழம்பு’ செய்முறை!

mukesh M

கடுகு குழம்பு!

பெண்களின் மாதவிடாய் பிரச்சனை மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்க உதவும் கடுகு பயன்படுத்தி சுவையான குழம்பு ஒன்றை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: instagram-com

தேவையான பொருட்கள்!

கடுகு - 1 கைப்பிடி | சின்ன வெங்காயம் - 10 | பூண்டு பல் - 30 | கா.மிளகாய் - 7 | மல்லி விதை - 1 கைப்பிடி | புளி - எலுமிச்சை அளவு | சீரகம் - 1 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

தக்காளி - 2 | கறிவேப்பிலை - 1 கொத்து | மஞ்சள் - ½ ஸ்பூன் | பெருங்காய பொடி - ½ ஸ்பூன் | மிளகு பொடி - 1 ஸ்பூன் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். அதேநேரம் எடுத்துக்கொண்ட தக்காளி பழத்தை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் கடுகு சேர்த்து வெடிக்க வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் இதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் மல்லி விதை, மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

தொடர்ந்து இதே கடாயில் புளியை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். இச்சேர்மங்கள் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜார் ஒன்றில் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தற்போது குழம்பு தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து தக்காளி, மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

தக்காளி நன்கு மசிந்த நிலையில் இதில் மிக்ஸியில் அரைத்து எடுத்த விழுது, உப்பு சேர்த்து 5 - 7 நிமிடங்களுக்கு வதக்கவும். பின் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

Image Source: istock

கடுகு குழம்பு ரெடி!

குழம்பு நன்கு கொதிக்கும் நிலையில் மிளகு பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான கடுகு குழம்பு ரெடி!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: மசாலா தோசையை இப்படி தான்? இது தெரியாம போச்சே!

[ad_2]