Jun 5, 2024
BY: Anojமருத்துவ குணங்கள் நிறைந்த சங்குப் பூவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதனை கொண்டு எப்படி சுவையான சாதம் செய்யலாம் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: instagram-com/lick_your_finger
பாஸ்மதி அரிசி - 250 கிராம்; சங்குப் பூ - 40; நெய் - 50 கிராம்; பட்டை - 1; கிராம்பு - 1; இஞ்சி பூண்டு பேஸ்ட் -சிறிதளவு; உப்பு - தேவைக்கேற்ப; முந்திரி - 10
Image Source: istock
முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக வாஷ் செய்து, தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்
Image Source: istock
இப்போது பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் சங்குப் பூவை போட்டு ஊறவையுங்கள். தண்ணீர் நிறம் மாறியதும் வடிகட்டிக்கொள்ளவும்.
Image Source: pexels-com
அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்
Image Source: istock
பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
இறுதியாக, கலவையுடன் ஊறவைத்த அரிசி மற்றும் வடிகட்டிய சங்குப் பூ தண்ணீரை சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும். சுமார் 2 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்
Image Source: istock
சாதம் வெந்தப்பிறகு நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறினால் சுவையான சங்குப் பூ சாதம் ரெடி
Image Source: instagram-com/avocadoangel_
மாதவிடாய் தசைப்பிடிப்பை குறைத்திட சங்குப் பூவை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். மேலும், உடலில் புத்துணர்ச்சியை அதிகரிக்க சங்குப் பூவில் டீ போட்டு குடிக்க செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!