Jun 17, 2024
BY: Anojவெள்ளரிக்காயின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதன் நீர்ச்சத்து உடலில் நீரேற்றத்தை பராமரிக்க உதவக்கூடும். அதனை பயன்படுத்தி எப்படி சுவையான கூட்டு செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
வெள்ளரிக்காய் - 1; தேங்காய் துருவல் - அரை கப்; சீரகம் - அரை டீஸ்பூன்; ப.மிளகாய் - 3; பூண்டு - 4 பற்கள்; கடுகு - 1 டீஸ்பூன்; எண்ணெய் - தேவையான அளவு; வர மிளகாய் - 3; கறிவேப்பிலை - சிறிதளவு ; தயிர் - 3 டீஸ்பூன்
Image Source: istock
முதலில் வெள்ளரிக்காயின் தோலை சீவிக்கொள்ளவும். பிறகு, அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
Image Source: pexels-com
பிறகு, தேங்காய் துருவல், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் அரை டீஸ்பூன் கடுகை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
இப்போது அடுப்பில் கடாயை வைக்கவும். அதில் நறுக்கிய வெள்ளரிக்காயை சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்
Image Source: istock
வெள்ளரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். சுமார் 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்க வேண்டும்
Image Source: istock
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1 டீஸ்பூன் கடுகை சேர்த்து தாளித்துவிட்டு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்
Image Source: istock
இப்போது, மசாலா சேர்த்த வேகவைத்த வெள்ளரிக்காயை சேர்த்துவிட்டு, 1 டீஸ்பூன் தயிரை சேர்க்க வேண்டும்
Image Source: istock
கலவையை சுமார் 3 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட்டால், வீடே மணமணக்கும் வெள்ளரிக்காய் கூட்டு ரெடி. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
Image Source: instagram-com/deepfriedbread
Thanks For Reading!