[ad_1] சூப்பரான சுவையில் இறால் வடை.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க!

Jul 27, 2024

BY: Anoj, Samayam Tamil

சூப்பரான சுவையில் இறால் வடை.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க!

இறால் வடை ரெசிபி

பாக்கியலட்சுமி சீரியலில் சொன்ன இறால் வடையை எப்படி சுவை மாறாமல் வீட்டிலேயே செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

தேவையான பொருட்கள்

இறால் - கால் கிலோ; மஞ்சள் - கால் டீஸ்பூன்; மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்; கரம் மசாலா - அரை டீஸ்பூன்; இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்; பெரிய வெங்காயம் - 1

Image Source: istock

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 1 கப்; சீரகம் - 1 டீஸ்பூன்; உப்பு - சுவைக்கேற்ப; சின்ன வெங்காயம் - 10; கறிவேப்பிலை - சிறிதளவு; பூண்டு - 4; எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து, சிறியதாக நறுக்கி பவுலுக்கு மாற்ற வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 2

பிறகு, மிளகாய் பொடி, மஞ்சள், கரம் மசாலா மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து அரை மணி நேரம் ஊறவிடவும்

Image Source: istock

செய்முறை படி - 3

இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில், மசாலா தடவிய இறால் கலவையை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக வைத்துவிடவும்

Image Source: istock

செய்முறை படி - 4

இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலை பருப்பு, சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 5

அடுத்து, வதக்கிய இறால் மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை வடை போல் தட்டிக்கொள்ளவும்

Image Source: istock

சுடச்சுட வடை ரெடி

இப்போது கடாயில் வடை பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்ற வேண்டும். அதில், தட்டிய வடையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இதனை மாலையில் சுடச்சுட பரிமாற செய்யுங்கள்

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: ‘முளைகட்டிய பயறு - பீட்ரூட் அடை’ - செய்வது எப்படி தெரியுமா?

[ad_2]