May 27, 2024
சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சால் டேனிங் ஏற்படுகிறது. UVA கதிர்கள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி சருமத்தில் மெலனின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் தோல் படிப்படியாக கருமையாகுகிறது.
Image Source: istock
சருமத்தில் உள்ள கருமையை நீக்க இந்த மசூர் பருப்பு ஃபேஸ் பேக் உதவுகிறது. மசூர் பருப்பு இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தயிர் சரும அழற்சியை போக்க உதவுகிறது.
Image Source: istock
1/2 டேபிள் ஸ்பூன் மசூர் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
மசூர் பருப்பு, கடலை மாவு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து ஸ்மூத் பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
Image Source: pexels-com
20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்திற்கு ஒரு முறை என இதை பயன்படுத்தி வாருங்கள்.
Image Source: istock
மசூர் பருப்பு இறந்த சரும செல்களை நீக்குகிறது. இதில் புரோட்டீன், விட்டமின்கள் உள்ளன. சருமம் வயதாகுவதை தடுக்கிறது.
Image Source: istock
கடலை மாவு சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. பருக்கள் வருவதை தடுக்கிறது. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை போக்குகிறது. சருமக் கருமையை போக்க உதவுகிறது.
Image Source: istock
தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சரும கருமையை போக்க உதவுகிறது. சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. சருமத்தை ஆழமாக சுத்தமாக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!