May 7, 2024
ஒரு சில உணவுகளை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சாப்பிடுவது செரிமான சிக்கல், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் குறிப்பிடும் நிலையில், அந்த ஒரு சில உணவுகள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
கார்போஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை மாலையில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
Image Source: istock
சிவப்பு மிளகாய், மிளகு போன்ற காரசாரமான உணவுகளை மாலையில் சாப்பிட்டால் நம் உணவு செரிமான அமைப்பு பாதிக்கக்கூடும். இதனால் இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
Image Source: istock
டீ காபி போன்ற காஃபைன் நிறைந்த பானங்களை பொழுது சாய்ந்த பின் குடிக்கக்கூடாது. ஏனென்றால் இந்த பானங்கள் இரவு நேரத்தில் நமக்கு தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.
Image Source: pexels-com
வருத்த உணவுகள் கிரீமி சாஸ்கள் மற்றும் இறைச்சியில் கொழுப்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது இரவில் சாப்பிடுவதால் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் அஜீரண பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
இரவு நேரங்களில் ஒரு கிளாஸ் வைன் அல்லது உங்களுக்கு பிடித்த மதுபானம் குடித்தாலும் அதில் இருக்கும் ஆல்கஹால் உங்கள் தூக்க முறைகளை சீர்குலைத்து தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image Source: istock
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், தக்காளி மற்றும் வினிகர் போன்ற உணவுகளில் அமிலத்தன்மை அதிகம் நிறைந்துள்ளது. இந்த உணவுகளை இரவில் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
Image Source: istock
இரவில் தூங்குவதற்கு முன்பு சில கனமான உணவுகளை சாப்பிடுவது நம் செரிமான அமைப்பை சீர்குலைத்து அஜீரணம் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Image Source: istock
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம் என்று கூறினாலும் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அதிகளவு தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
Image Source: istock
Thanks For Reading!