[ad_1] செட்டிநாடு ஸ்பெஷல் ‘பாகற்காய் பச்சடி’ செய்முறை!

May 30, 2024

செட்டிநாடு ஸ்பெஷல் ‘பாகற்காய் பச்சடி’ செய்முறை!

mukesh M

பாகற்காய் பச்சடி!

எண்ணற்ற ஊட்டச்சத்து பல நிறைந்த பாகற்காய் பயன்படுத்தி சுவையான பச்சடி ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

பாகற்காய் - 250கி | வெங்காயம் - 2 | புளி - எலுமிச்சை அளவு | சர்க்கரை - 50கி | தேங்காய் துருவல் - 1 கப் | கறிவேப்பிலை - 1 கொத்து | மஞ்சள் பொடி - 1 ஸ்பூன் | கடுகு - 1 ஸ்பூன்| சீரகம் - 1 ஸ்பூன் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட பாகற்காயினை நறுக்கி - விதை நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும். அதேநேரம் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட புளியை தண்ணீருடன் சேர்த்து கரைத்து புளி கரைசல் தயார் செய்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

தற்போது பச்சடி தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து பாகற்காய் துண்டு சேர்த்து வதக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 4

பாகற்காயின் பச்சை வாசம் நீங்கும் நிலையில் இதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளறி 5 - 7 நிமிடங்களுக்கு பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

பின் பாத்திரத்தின் மூடி திறந்து சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு உருகும் வரை காத்திருக்கவும். சர்க்கரை கரைந்த பின் இதில் புளி கரைசல் சேர்த்து வதக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 6

பாகற்காய் நன்கு வதங்கி பின் இதில் துருவி வைத்துள்ள தேங்காயினை சேர்த்து கிளறி 1 நிமிடத்திற்கு மிகாமல் வதக்கவும்.

Image Source: istock

பாகற்காய் பச்சடி ரெடி!

இதனிடையே ஒரு கொத்து கொத்தமல்லி தழையை நன்கு பொடியாக நறுக்கி பச்சடியுடன் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட பாகற்காய் பச்சடி ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: பீட்ரூட் சால்னா - எப்படி செய்வது தெரியுமா?

[ad_2]