[ad_1] சென்னையிலிருந்து ஒரு Bike Trip - வார விடுமுறையை செலவிட சிறந்த இடம்!

Jun 12, 2024

சென்னையிலிருந்து ஒரு Bike Trip - வார விடுமுறையை செலவிட சிறந்த இடம்!

mukesh M

வீக்கெண்ட் பைக் ட்ரிப்!

வார இறுதியில் பைக் ட்ரிப் செல்வது நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் . அந்த வரிசையில் கண்டிப்பாக நீங்கள் செல்ல வேண்டிய சில சிறந்த சாலைப் பயணங்களை இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

மகாபலிபுரம்

சென்னைக்கு மிக அருகில் உள்ள மகாபலிபுரம் ஒரு சிறந்த சுற்றுலா இடம். நீங்கள் பைக் ட்ரிப் சென்றால் சென்னை முதல் மகாபலிபுரம் தூரம் 56.9 கி.மீ மட்டுமே.

Image Source: unsplash-com

தடா அருவி / கம்பகம் அருவி!

சென்னையில் இருந்து தடா வரை செல்ல ஒரு நாள் சாலைப் பயணத்தை மேற்கொண்டால் இயற்கையின் அழகை ரசித்திட முடியும். இங்கு அடர்ந்த காடுகளின் வழியாக பைக் பயணம் நன்றாக இருக்கும். சென்னையிலிருந்து தடா தூரம்: 70.9 கி.மீ

Image Source: unsplash-com

காஞ்சிபுரம்

ஆயிரம் கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற பட்டுப் புடவைகளின் நகரமான காஞ்சிபுரம் பைக்கில் செல்ல ஒரு சிறந்த இடம். இங்கு திராவிட கட்டிடக்கலையால் அலங்கரிக்கப்பட்ட புனித ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் உள்ளது. சென்னை முதல் காஞ்சிபுரம் தூரம்: 76 9 கி.மீ

Image Source: unsplash-com

திருப்பதி

கடவுள் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சொந்தமான திருப்பதிக்கு சென்னையில் இருந்து ஆன்மீக பயணம் செய்ய பைக் ட்ரிப் சிறந்தது. சென்னையிலிருந்து திருப்பதி தூரம்: 133.1 கி.மீ

Image Source: unsplash-com

வேலூர்

சென்னையிலிருந்து வேலூருக்குச் செல்லும் சாலைப் பயணத்தில், வரலாறு இடங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை கண்டு ரசிக்கலாம். இங்கு பண்டைய திராவிட கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் வேலூர் கோட்டை உள்ளது. சென்னை முதல் வேலூர் தூரம்: 137 8 கி.மீ

Image Source: unsplash-com

பாண்டிச்சேரி

சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பாண்டிச்சேரிக்கு சாலைப் பயணம் அற்புதமான ஒன்று. வண்ணமயமான பிரெஞ்சு கட்டிடக்கலையால் அலங்கரிக்கப்பட்ட ஒயிட் டவுனின் அழகை ரசிக்கலாம். சென்னையில் இருந்து பாண்டிச்சேரி தூரம்: 151.2 கி.மீ

Image Source: unsplash-com

ஏலகிரி

சென்னையிலிருந்து சாலைப் பயணத்தில் ஏலகிரிக்கு சென்றால் அங்கு பசுமையான நிலப்பரப்புகளை ரசிக்கலாம். இங்கு புங்கனூர் ஏரியில் அமைதியான படகு சவாரி செய்து புத்துணர்ச்சி அளிக்கும் காற்றை சுவாசிக்கலாம். சென்னை முதல் ஏலகிரி தூரம்: 226.2 கி.மீ

Image Source: unsplash-com

ஹார்ஸ்லி ஹில்ஸ்

கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் சென்னையிலிருந்து சாலைப் பயணம் செல்ல ஒரு சிறந்த தேர்வு. தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட ஹார்ஸ்லி ஹில்ஸ் சென்னையிலிருந்து 260.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கேரளாவின் இயற்கை அற்புதம்.. 'தேவிகுளம் மலை வாசஸ்தலம்' பற்றி தெரியுமா?

[ad_2]