[ad_1] சென்னை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

Jul 5, 2024

சென்னை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

mukesh M

சென்னை எனும் மெட்ராஸ்!

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகர் பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் காணலாம்!

Image Source: unsplash-com

கடலுக்கு அருகில் உள்ள நகரம்!

சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட மெட்ராஸ், கடலுக்கு அருகில் அமைந்திருக்கும் நகரம் ஆகும். ஆம், வங்காள விரிகுடாவின் கடற்கையில் இந்த சென்னை மாநகர் அமைந்துள்ளது!

Image Source: pexels-com

பெருநகரப் பகுதி!

தகவல்கள் படி சென்னையின் மொத்த மக்கள் தொகை (2024 நிலவரப்படி) 12.05 மில்லியன் ஆகும். அந்த வகையில் இந்த சென்னை, உலகின் 31-வது பெரிய பெருநகரப் பகுதியாக கருதப்படுகிறது.

Image Source: unsplash-com

தென்னிந்தியாவின் நுழைவாயில்!

தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க கலாச்சார மையமாக இருக்கும் இந்த சென்னை, ‘தென்னிந்தியாவின் நுழைவாயில்’ என்றும் அழைக்கப்படுகிறது!

Image Source: unsplash-com

சூடான நகரம்!

சென்னை உண்மையில் ஒரு சூடான (அதிக வெப்பநிலை கொண்ட) நகரம் ஆகும். தகவல்கள் படி இந்த நகரத்தின் சராசரி வெப்பநிலை 32 - 35°C வரை செல்லக்கூடும்.

Image Source: unsplash-com

நீர்நிலைகள் நிறைந்தது!

தகவல்கள் படி சென்னையில் 25-க்கும் மேற்பட்ட பெரும் ஏரிகள் உள்ளன. இதை தவிர்த்து குளம், குட்டைகள், ஆறு என ஏராளமான நீர்நிலைகள் நிறைந்த ஒரு நகரமாக இந்த சென்னை பார்க்கப்படுகிறது!

Image Source: unsplash-com

வணிக மையமாக இருந்த இடம்!

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வணிக மையமாக இந்த சென்னை அமைந்திருந்தது. இதன் விளைவாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாம் ஆங்கிலேயர் உண்டாக்கிய கட்டமைப்புகளை காண இயலும்!

Image Source: unsplash-com

கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம்!

இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்ட மன்னர்களின் வலமான வரலாற்றை தாங்கி நிற்கும் சென்னை, கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நகரமாக உள்ளது. இந்த வகையில் இங்கு, இந்து மரபுடன் தொடர்புடைய பல்வேறு கோவில்கள், கட்டமைப்புகளை இங்கு நாம் காணலாம்!

Image Source: unsplash-com

நவநாகரீக நகரம்!

பழமை, பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேநேரம், நவநாகரீக கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தென்னிந்திய நகரமாகவும் இந்த சென்னை பார்க்கப்படுகிறது!

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: விசித்திரமான தனித்துவம் வாய்ந்த மரங்கள்

[ad_2]