Aug 8, 2024
என்னதான் பணி செய்வது மனித வாழ்க்கையின் இன்றியமையாத கடமை என்றாலும், குறிப்பிட்ட ஒரு பணி நமக்கு ஒத்துப்போகவில்லை எனில் அதில் விருந்து விலகி செல்ல தான் ஆக வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு ஒத்துப்போகாத பணியை புரிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: pexels-com
முதலில் பணிச்சூழல், தனி வாழ்க்கை இரண்டுக்குமான நேரத்தை சரியாக ஒதுக்கி பழகுங்கள். ஒன்றுக்காக மற்றொன்றை இறக்கி பார்த்தாலே சிக்கல் தான். வேலைக்கும் - வாழ்க்கைக்கும் சமநிலையை உறுதி செய்ய முடியவில்லை எனில் அந்த பணியை விடுவது நல்லது!
Image Source: unsplash-com
ஒரு ஊழியராக நீங்கள் பணி செய்யும் அலுவலகத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், திறனை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை என்றால் அந்த வேலை உங்களுக்கானது இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
Image Source: unsplash-com
நீங்கள் பார்க்கும் பணிக்கு இன்னொரு அலுவலகத்தில் அதிக சம்பளம் தருகிறார்கள் என கேள்விப்பட்டதும் ஆர்வம் என்பது குறையும். இது தனிப்பட்ட முறையிலும், அலுவலக வளர்ச்சியிலும் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே, இதன் போது உங்கள் தற்போதைய பணியை விடுவது நல்லது!
Image Source: unsplash-com
செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியம் வாழ்க்கையை நடத்த போதவில்லை என்றால் தாராளமாக வேலையை விட்டு விடலாம். வாய்ப்புகள் நிறைய இருக்கும் நிலையில் சரியாக தேட வேண்டும்.
Image Source: unsplash-com
சில அலுவலகங்களில் நம்முடைய சுற்றுப்புறம் நன்றாக இருக்க வேண்டும். தேவையில்லாத பேச்சுகள் போன்ற சூழல் இருப்பதை அசௌகரியமாக உணர்ந்தால் வேலையை விட்டு விடலாம்.
Image Source: unsplash-com
என்னதான் அலுவலகத்துக்கு உண்மையாக உழைத்தாலும் உங்களின் பணிக்கு சரியான அங்கீகாரம், மதிப்பீடு, பாராட்டு கிடைக்கவில்லை என்றால் வேறு வேலை தேட வேண்டிய நேரம் வந்து விட்டது என நினைத்துக் கொள்ளலாம்.
Image Source: unsplash-com
ஓராண்டு முடிவில் அலுவலக பணியால் திறன், ஊதியம் போன்றவற்றில் எந்தவித வளர்ச்சியும் காணாவிட்டால் பணியில் இருந்து மாறுவது சிறந்தது.
Image Source: unsplash-com
தினமும் அலுவலகம் செல்வதில் எரிச்சல், பயம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வேறு வேலைக்கு மாற முயற்சியுங்கள். தற்போது உள்ள வேலையில் நீடிப்பது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்!
Image Source: unsplash-com
Thanks For Reading!