[ad_1] செரிமான பிரச்சனைகளை போக்கும் சட்னி வகைகள்!

Jun 11, 2024

செரிமான பிரச்சனைகளை போக்கும் சட்னி வகைகள்!

mukesh M

செரிமானத்திற்கு உதவும் சட்னி!

நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணம் ஆனால் மட்டுமே நாம் ஆரோக்கியமான உடலமைப்பை கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்நிலையில் இந்த ஜீரண செயல்பாட்டை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவும் சட்னிகள் சிலவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

புளி சட்னி

பொதுவாகவே புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் போன்றவை செரிமான பிரச்சனைகளை சரி செய்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.

Image Source: istock

புதினா சட்னி

புதினா ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய நல்ல ஒரு ஆதாரம் ஆகும். இவற்றில் உள்ள பண்புகள் செரிமானத்தை சரி செய்து ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்ச உதவுகிறது. மேலும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க புதினாவில் உள்ள பண்புகள் உதவுகின்றன.

Image Source: istock

வேர்க்கடலை சட்னி

வேர்க்கடலையில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற பண்பு, புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயம், பூண்டுடன் இந்த வேர்க்கடலையும் சேர்த்து அரைத்து சட்னியாக உட்கொள்ள செரிமான பிரச்சனை நீங்கும்!

Image Source: istock

மாங்காய் சட்னி

நார் சத்து நிறைந்த இந்த மாங்காயில் சட்னி செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. மாங்காயில் உள்ள பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

Image Source: istock

தேங்காய் சட்னி!

தென்னிந்திய வீடுகளில் பெரும்பாலும் தயாரிக்கப்படும் சட்னி வகைகளில் தேங்காய் சட்னி அடங்கும். தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும் இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

Image Source: istock

ஆப்பிள் சட்னி

என்னது ஆப்பிளில் சட்னியா? என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ஆனால் இந்த ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள், நார்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நமது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. ஆப்பிளை சட்னி வடிவிலும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

தக்காளி சட்னி

மிகவும் சுவை மிகுந்த சட்னிகளில் ஒன்று தக்காளி சட்னி. தக்காளியிலும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இது செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்தி இதில் உள்ள ப்ரோபயோடிக் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

Image Source: istock

பருப்பு துவையல் அல்லது சட்னி

பருப்பு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த மூலமாக உள்ளது. இதை பயன்படுத்தி துவையல் அல்லது சட்னி தென்னிந்திய வீடுகளில் சமைக்கப்படுகிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகளை சரி செய்வதில் இந்த பருப்பு சட்னி முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: ஞாபக மறதி அதிகமாயிடுச்சா..? இதுதான் காரணம்!

[ad_2]