May 14, 2024
செரிமான பிரச்சனை இருக்கும் சமயத்தில், நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் அதன் நிலைமையை மோசமாக்க வாய்ப்புள்ளது. அப்போது நீங்கள் சாப்பிடக்கூடாத உணவு பட்டியலை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: pexels-com
காரமான உணவுகள் சாப்பிடுவது, செரிமான கோளாறுகளை அதிகரித்து நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. மிளகாய் உணவுகள் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்கவும்
Image Source: istock
நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகள் ஜீரணிப்பது கடினம் என்பதால், செரிமான அசெளகரியம் மோசமாகி வயிறு உப்புசம் மற்றும் வாயு ஏற்படலாம். பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும்
Image Source: istock
காபி அளவுக்கு அதிகமாக குடிப்பது, வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்க செய்யலாம். இவை இரைப்பை வால்வில் தளர்வை உண்டாக்கி நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு மற்றும் பிற செரிமான அசெளகரியங்களை ஏற்படுத்தலாம்.
Image Source: istock
அமிலத்தன்மை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உதாராணமாக, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, காபி மற்றும் வினிகர் நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும். இவை செரிமான கோளாறுகளை மோசமாக்க செய்யலாம்
Image Source: istock
செயற்கை இனிப்புகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதித்து, வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகளை உண்டாக்கலாம். எனவே, செரிமான பிரச்சனை இருப்பவர்கள் செயற்கை இனிப்புகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்
Image Source: istock
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்பு, உப்பு, செயற்கை இனிப்பு மற்றும் செயற்கை பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அதிகமாக இருக்கக்கூடும். இவை குடலில் பாக்டீரியா இருப்பை பாதிப்பு செரிமான கோளாறுகளை மோசமாக்கக்கூடும்.
Image Source: istock
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருப்பவர்கள் செரிமான கோளாறுகளை சந்திக்க நேரிடலாம். அதிலுள்ள சர்க்கரை உள்ளடக்கம், ஜீரணிப்பதை கடினமாக்கி வயிறு உப்புசம், தசைப்பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்
Image Source: istock
பழங்கள், காய்கறிகள், மெலிந்த இறைச்சி மற்றும் முழு தானியம் போன்ற பதப்படுத்தப்படாத உணவுகளை உட்கொள்ள ஆரம்பியுங்கள். நட்ஸ், விதைகள் சாப்பிடுவதும் பலன் தரக்கூடும். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருந்தால் பாதாம் பால் குடிப்பது சிறந்த முடிவாகும்
Image Source: istock
Thanks For Reading!