[ad_1] சைனஸ் (Sinusitis) பிரச்சனை உள்ளவர்கள் தொடவே கூடாத உணவுகள்!

Jul 6, 2024

சைனஸ் (Sinusitis) பிரச்சனை உள்ளவர்கள் தொடவே கூடாத உணவுகள்!

mukesh M

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா?

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? குறித்த இந்த உணவுகளை உண்பதால் உண்டாகும் பிரச்சனைகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

பால் பொருட்கள்!

பால், சீஸ், தயிர் போன்ற பால் பொருட்களின் நுகர்வு ஆனது, உங்கள் சைனஸ் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தலாம். எனவே, இந்த பால் பொருட்களை முழுவதுமாக தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை!

சைனஸ் பிரச்சனை உள்ளபோது சர்க்கரை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவது கூடாது. குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது கூடாது.

Image Source: istock

எண்ணெயில் பொரித்த உணவுகள்!

எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்தவு சுவாச குழாயில் அழற்சிகளை அதிகரிக்கும். இந்த அழற்சி ஆனது, சைனஸ் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

ஆல்கஹால்!

ஆல்கஹால் நிறைந்த மது பானங்களில் நுகர்வு நாசி பாதை வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், சைனஸ் பிரச்சனையின் அறிகுறிகளை அதிகரிக்கும். எனவே, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மது பானத்தை தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

காஃபின் பானங்கள்!

காஃபின் நிறைந்த பானங்கள், நீரிழப்பை அதிகரிக்கும். இதன் விளைவாக நாசி பாதை தடிப்பு, அழற்சியும் அதிகரிக்கும். எனவே, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் காஃபின் பானங்களை தவிர்ப்பது நல்லது!

Image Source: pexels-com

தக்காளி!

தக்காளியில் காணப்படும் இஸ்டமைன் எனும் உள்ளடக்கம், அழற்சிகளை அதிகரிக்கும். மேலும், சைனஸ் பிரச்சனையின் தீவிரத்தை அதிகரிக்கும் எனவே, சைனஸ் உள்ளவர்கள் தக்காளியை தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

பதப்படுத்தப்பட்ட இறைச்சி!

பதப்படுத்தப்பட்ட இறைச்சி எனப்படுவது இரசாயனப் பொருட்கள் மற்றும் செயற்கை நிறமூட்டிகளால் பதப்படுத்தப்படும் இறைச்சிகள் ஆகும். சைனஸ் அறிகுறிகளை அதிகரிக்கும் இந்த இறைச்சியை தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

குளிர்ச்சியான நீர்!

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்விக்கப்படும் தண்ணீர் இரத்த நாளங்களின் சுருக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், நாசி பாதை அடைப்புக்கு வழிவகுக்குத்து - சைனஸ் பிரச்சனையை தீவிரப்படுத்துகிறது!

Image Source: istock

Thanks For Reading!

Next: ரொட்டி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா ?

[ad_2]