[ad_1] சைவப் பிரியர்களுக்கு சுற்றுலா செல்ல சிறந்த சர்வதேச இடங்கள் இதோ

May 25, 2024

சைவப் பிரியர்களுக்கு சுற்றுலா செல்ல சிறந்த சர்வதேச இடங்கள் இதோ

Anoj

சைவ பிரியர்களுக்கு ஏற்ற சுற்றுலா

சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சைவ உணவு பிரியர்கள் ருசியான உணவகங்களை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருக்கும். அவர்களுக்காக பிரத்தியேகமாக சைவ உணவுகளை சில சுற்றுலா இடங்கள் அளிக்கிறது. அது எந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

போர்ட்லேண்ட்

சைவ உணவு உண்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் இது ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு சைவ உணவகங்கள் சைவ உணவு வண்டிகள் மற்றும் கஃபேக்கள் நிறைய உள்ளன.

Image Source: unsplash-com

பெர்லின்

ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லினில் சைவ உணவு உணவகங்கள் அதிகம் உள்ளது. இந்த நிலையில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பெர்லின் நகரம் ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மாறி உள்ளது.

Image Source: unsplash-com

தைப்பே

தைவான் நகரில் உள்ள தைப்பே என்ற இடத்தில் நீங்கள் தெரு உணவு கடைகளில் கூட சைவ உணவுகளை பார்க்கலாம். எனவே சைவ பிரியர்களுக்கு தைப்பே ஒரு அற்புதமான சுற்றுலா இடம்.

Image Source: unsplash-com

சியாங் மாய்

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் ஒரு நாடு தாய்லாந்து. இந்த தாய்லாந்தில் அமைந்துள்ள சியாங் மாய் என்ற இடத்தில் ஏராளமான சுவையான சைவ உணவகங்களை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

கிளாஸ்கோ

ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள கிளாஸ்கோ பகுதியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சைவ சூப்புகள் மற்றும் சாண்ட்விச்கள் வழங்கும் சைவ உணவகங்கள் அமைந்துள்ளது. மேலும் இங்கு ஏராளமான சைவ உணவுகள் மிகவும் பிரபலம்.

Image Source: unsplash-com

விசென்சா

இத்தாலி என்றாலே பலருக்கும் பீட்சா மற்றும் பாஸ்தா தான் நினைவிற்கு வரும். ஆனால் இத்தாலியில் அமைந்துள்ள விசென்சா என்ற நகரில் சைவ உணவுகள் மிகவும் பிரபலம்.

Image Source: unsplash-com

சிங்கப்பூர்

மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்கள் இருப்பதால் அதன் உணவு கலாச்சாரமும் மாறுபடும். இங்கு பாரம்பரிய சீன மற்றும் இந்திய சைவ உணவுகள் மிகவும் பிரபலம்.

Image Source: pexels-com

நியூயார்க்

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் அமெரிக்காவில் அமைந்துள்ள நியூயார்க் நகரம் ஒரு சிறந்த சுற்றுலா தளம். இங்கு பல பிரபலமான சைவ உணவகங்கள் சைவ கஃபேகள் உள்ளது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: உங்கள் குழந்தைகளை வாழ்வில் ஒருமுறையேனும் அழைத்து செல்ல வேண்டிய நாடுகள்!

[ad_2]