Jul 20, 2024
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு 1,250 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அவர் வைத்திருக்கும் விமானத்தின் மதிப்பு ரூ.250 கோடி என கூறப்படுகிறது
Image Source: x-com/icc
ரன் மிஷின் விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டக்கூடும். அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்க செய்கிறார். அவர் வைத்திருக்கும் விமானத்தின் மதிப்பு ரூ.125 கோடியை தாண்ட செய்யலாம்
Image Source: instagram-com
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன், சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வைத்துள்ளார். அதன் மதிப்பு 30 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது
Image Source: facebook-com/icc
மகேந்திர சிங் தோனி, இந்தியாவின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். விலை உயர்ந்த பைக் மற்றும் கார்களை சேகரிப்பதில் அதிக ஆர்வமிக்கவர். அவரது விமானத்தின் விலை ரூ.100 கோடியை தாண்டக்கூடும்
Image Source: x-com/icc
பிரண்டன் மெக்கல்லம், முன்னாள் நியூசிலாந்து வீரர். அவர் வைத்திருக்கும் பிரைவேட் ஜெட்டின் மதிப்பு 17 மில்லியன் டாலருக்கு மேல் இருக்கலாம்
Image Source: x-com/icc
முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரரான ஜாக் கலிஸ், உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். தென்னாப்பிரிக்காவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் கலிஸ், 13 மில்லியன் டாலர் மதிப்பில் தனி விமானத்தை வைத்துள்ளார்
Image Source: facebook-com/icc
1983 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கபில் தேவ், சொந்தமாக விமானம் வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.110 கோடி இருக்கலாம். இவர் தனி விமானம் வாங்கிய முதல் இந்திய விளையாட்டு வீரர் என்றும் கூறப்படுகிறது
Image Source: x-com/icc
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை இருக்கலாம். ஹர்திக் சொத்து மதிப்பு ரூ.90 கோடி என கூறப்படுகிறது
Image Source: instagram-com/natasastankovic__
ஆஸ்திரேலியாவுக்கு 3 உலக கோப்பைகளை பெற்று தந்த ஆடம் கில்கிறிஸ்ட், பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் 12 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் விமானம் ஒன்றை வைத்துள்ளார். அதை குடும்பத்துடன் விடுமுறை செல்ல பயன்படுத்துகிறார்
Image Source: x-com/icc
Thanks For Reading!