Jul 17, 2024
சொரியாசிஸ் என்பது சருமத்தில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் காரணமாக ஏற்படுகிறது. இது உச்சந்தலை, முழங்கால், முதுகு என எங்கு வேண்டுமானாலும் வரக்கூடும். அரிப்பு, செதில் மற்றும் சிவப்பு திட்டுக்களை உண்டாக்கக்கூடும். அதனை போக்கும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: istock
சொரியாசிஸ் காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளைப் போக்க ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்துகின்றனர். எரிச்சலை தவிர்க்க தண்ணீருடன் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து, வாரத்திற்கு பல முறை தடவி வாஷ் செய்ய வேண்டும்
Image Source: istock
சரும பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக கற்றாழை ஜெல் திகழ்கிறது. மேலும், நீரேற்றத்தை அதிகரிக்கவும் உதவக்கூடும். பிரஷ் கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், அறிகுறியின் தீவிரத்தை நிச்சயம் குறைத்திட முடியும்
Image Source: istock
இது சரும பிரச்சனைகளை போக்கும் சூரிய ஒளி சிகிச்சையாகும். 5 நிமிடத்திற்கு சூரிய வெளிச்சத்தில் நிற்பது, சொரியாசிஸ் அளவு மற்றும் தீவிரத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், 10 நிமிடத்திற்கு மேல் நிற்பது எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்கலாம்
Image Source: pexels-com
சரும அரிப்பை போக்கிட ஓட்ஸ் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. குளிக்கும் தண்ணீரில் ஓட்ஸ் பவுடரை சேர்ப்பது நல்ல பலனை தரக்கூடும்
Image Source: istock
சருமத்தில் ஆங்காங்கே தடித்து செதில்கள் உண்டாகுவதை தடுத்திட உப்பு குளியல் உதவக்கூடும். பாத்டப்பில் உள்ள தண்ணீரில் எப்சாம் உப்பு சேர்த்துவிட்டு 10 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். பிறகு மாய்ஸ்சுரைசர் அப்ளை செய்யலாம்
Image Source: istock
இந்த எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை முகப்பரு, சேற்றுப்புண் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நிலைகளை சரிசெய்யக்கூடும்
Image Source: istock
மஞ்சளில் உள்ள குர்குமின் கலவை ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவை இரண்டும் சொரியாசிஸ் அறிகுறிகளை போக்கக்கூடும். சிலர் மஞ்சள் பேஸ்டை பாதிப்படைந்த இடங்களில் அப்ளையும் செய்வார்கள்
Image Source: istock
சொரியாசிஸ் யாருக்கும் வேண்டுமானாலும் வரக்கூடும். அவை முழுமையாக நீங்கும் வரை சிகிச்சை தொடர வேண்டும். பாதியிலே விட்டுவிட்டால் அவை மீண்டும் வரக்கூடும். சொரியாசிஸ் வலியுடன் கடுமையான அசெளகரியத்தை ஏற்படுத்தினால் மருத்துவரை சந்திக்க செய்யுங்கள்
Image Source: istock
Thanks For Reading!