May 18, 2024
தாவர அடிப்படையிலான புரதங்கள் நிறைந்த சோயா பால் சைவ பிரியர்களின் முதன்மை தேர்வாக இருக்கும் நிலையில், இந்த சோயா பாலினை அளவுக்கு மிகுதியாக பருகினால் உண்டாகும் ஆபத்துக்கள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: pexels-com
சோயா பாலின் தாவர அடிப்படையிலான புரதத்தின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆனது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேக்கத்திற்கு வழிவகுக்கிறது. இந்த இரத்த ஓட்டத்தை பாதித்து பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது!
Image Source: istock
இரத்த நாளங்களில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது, சீரான இரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் பாதித்து மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
சோயா பாலில் காணப்படும் போதுமான அளவு புரதம் ஆனது கால்சியம், வைட்டமின் டி உறிஞ்சுதலை மறைமுகமாக பாதிக்கிறது. இதன் விளைவாக எலும்பகளில் பலவீனம், ஆரோக்கிய குறைவு ஏற்பட கூடும்!
Image Source: istock
சோயா பாலின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆனது செரிமான சிக்கல், அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட ஆரோக்கிய சிக்கலுக்கு வழிவகுக்க கூடும்!
Image Source: istock
ஆய்வுகளின் படி சோயா பாலில் காணப்படும் phytoestrogens எனும் உள்ளடக்கம் ஆனது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை பாதிக்கிறது. இந்த ஹார்மோன் சமநிலையின்மை ஆனது பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.
Image Source: istock
ஆய்வுகளின் படி சோயா பாலின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆனது, சரும ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, சரும சிவத்தல், தடிப்புகள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்க கூடும்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி 500 மில்லி அல்லது அதற்கும் குறைவாக பருகுவது நல்லது. அதேநேரம், இந்த அளவு ஆனது தனி நபரின் உடல் நிலை மற்றும் எடை பொறுத்து மாறுபடும் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும்!
Image Source: istock
சோயா பால் நுகர்வு ஆனது ஒரு சிலருக்கும் ஒவ்வாமையுடன் கூடிய சில உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த பாலை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவர் பரிந்துரை பெறுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!