[ad_1] 'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'-வில் அப்படி என்னதான் இருக்கிறது?

May 3, 2024

'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'-வில் அப்படி என்னதான் இருக்கிறது?

mukesh M

'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'!

உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது இந்தியாவின் முதல் தேசியப்பூங்கா ஆகும். புலிகளுக்கு பெயர் பெற்ற இந்த பூங்காவில் நாம் என்னென்ன செய்யலாம்? என்ன காணலாம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்!

Image Source: pexels-com

Safari

Safari எனப்படுவது வாகனத்தில் பயணித்தப்படி வன விலங்குகளைப் பார்ப்பதற்கான ஒரு பயணம் ஆகும். அந்த வகையில் இந்த 'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'-வில் Safar செல்லலாம்!

Image Source: unsplash-com

யானை சவாரி!

வாகனங்களில் பயணம் செய்து வன விலங்குகளை காணும் அதேநேரம், யானை மீது சவாரி செய்யும் வாய்ப்பும் இந்த 'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'-வில் கிடைக்கிறது.

Image Source: unsplash-com

அரிய வகை பறவைகளை காணலாம்!

சுமார் 920.9 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பூங்கா, எண்ணற்ற பறவைகளுக்கு சரணாலயமாக உள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் அரிய வகை பறவைகளையும் இங்கு நாம் காணலாம்!

Image Source: unsplash-com

River Rafting!

'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'-விற்கு செல்லும் பலர் அறியாத ஒரு விஷயம் River Rafting அம்சம் ஆகும். தகவல்கள் படி இங்கு காணப்படும் கோசி மற்றும் ராம்கங்கா நதிகளில் River Rafting செய்ய முடியும்!

Image Source: unsplash-com

மீன் பிடித்தல்!

'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'-விற்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் நதிகள் மாசு இல்லா தெளிவான நீருக்கும் பெயர் பெற்றவை.அந்த வகையில் உங்கள் நேரத்தை மீன்பிடித்தலில் கழிக்க ஏற்ற ஒரு இடமாகவும் இது உள்ளது!.

Image Source: unsplash-com

கிராமத்திற்குள் பயணம்!

'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா' அமைந்திருக்கும் வனப்பகுதியில் கலாச்சாரம் மாறா கிராமங்களையும் நாம் காணமுடியும். அந்த வகையில் இந்த கிராமங்களுக்கு பயணித்து, புதிய விஷயங்களை கண்டு ரசிக்கலாம்!

Image Source: unsplash-com

வனவிலங்கு புகைப்படங்கள்!

பரந்து விரிந்த இந்த காட்டில் (தேசியப்பூங்காவில்) நாம் வன விலங்குகளை காண்பதோடு, படம்பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனினும், இதற்கு பிரத்யேக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்!

Image Source: unsplash-com

கார்பெட் அருங்காட்சியகம்!

காலதுங்கி பகுதியில் அமைந்திருக்கும் இந்த கார்பெட் அருங்காட்சியகம் ஆனது 'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா' தொடர்பான வரலாறு மற்றும் பல அரிய தகவல்களை அறிய ஏற்ற ஒரு இடமாக உள்ளது!

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கர்நாடகாவில் ஒளிந்திருக்கும் அழகிய தீவு.. ரூ.300 இருந்தா போதும்!

[ad_2]