[ad_1] 'ஜி.வி பிரகாஷ்' முதல் 'தனுஷ்' வரை - சினிமாவில் தொடரும் விவாகரத்து கலாச்சாரம்​

'ஜி.வி பிரகாஷ்' முதல் 'தனுஷ்' வரை - சினிமாவில் தொடரும் விவாகரத்து கலாச்சாரம்​

Anoj

May 14, 2024

ஜி.வி பிரகாஷ்

ஜி.வி பிரகாஷ்

11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக ஜி.வி பிரகாஷ் - சைந்தவி தம்பதி அறிவித்துள்ளனர். பள்ளி காலம் முதலே காதலித்து வந்த இந்த தம்பதி, 2013ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்வதாக கூறியுள்ளனர்

Image Source: instagram-com/saindhavi_prakash

தனுஷ்

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி, சுமார் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக முடிவு எடுத்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்கிற 2 மகன்கள் உள்ளனர். இந்த ஸ்டார் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது

Image Source: instagram-com/aishwaryarajini

சமந்தா

சமந்தா - நாக சைதன்யா ஜோடி 2017ல் திருமணம் செய்தனர். ஆனால், திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி இல்லாததால், 2021ல் இருவரும் பரஸ்பர முடிவுடன் விவாகரத்து பெற்று கொண்டனர்

Image Source: instagram-com/samantharuthprabhuoffl

அரவிந்த் சுவாமி

நடிகர் அரவிந்த் சுவாமி, காயத்ரி ராமமூர்த்தி என்பவரை 1994ல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், 16 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2010ல் விவாகரத்து பெற்றுகொண்டார். பிறகு 2012ல் அபர்னா முகர்ஜி என்பவரை திருமணம் செய்தார்

Image Source: twitter-com/thearvindswami

அமலா பால்

நடிகை அமலா பால், இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து 2014ல் திருமணம் செய்தார். ஆனால், ஓரிரு மாதங்களிலே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட 2015ல் விவாகரத்து பெற்றனர். தற்போது இருவரும் வெவ்வேறு நபர்களை திருமண செய்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்

Image Source: instagram-com/amalapaul

பிரபு தேவா

நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா, ராம்லாத் என்பவரை 1995ல் திருமணம் செய்தார். ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக 2011ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்

Image Source: instagram-com/prabhudevakingofdance

பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை லலிதா குமாரியை 1994ல் திருமணம் செய்தார். ஆனால், 2009ல் பிற தனிப்பட்ட காரணங்களால் லலிதா குமாரியை விவாகரத்து செய்தார். பிறகு, 2010ல் நடன இயக்குனர் போனி வர்மாவை மறுமணம் செய்துகொண்டார்

Image Source: instagram-com/joinprakashraj

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் தனது நீண்ட நாள் காதலியான ரஜினி நட்ராஜை, 2011ல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் 2018ல் விவாகரத்து பெற்றுகொண்டனர். பிறகு, 2021ல் Jwala Gutta என்கிற பேட்மிண்டன் வீராங்கணையை திருமணம் செய்தார்

Image Source: instagram-com/thevishnuvishal

பார்த்திபன்

பார்த்திபன் 'புதிய பாதை' படத்தில் தன்னுடன் நடித்த சீதாவை 1990ல் திருமணம் செய்தார். ஆனால், பிற தனிப்பட்ட காரணங்களால் 2001ல் விவாகரத்து பெற்றனர். இருப்பினும், குழந்தைகளின் திருமணத்தை ஒன்றாக முன்னின்று நடத்தி கொடுத்தனர்

Image Source: instagram-com/radhakrishnan_parthiban

Thanks For Reading!

Next: கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள்!

[ad_2]