[ad_1] ​ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருமணமா? ஹனிமூன் செல்ல சூப்பரான இடங்கள்!

Jun 24, 2024

​ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருமணமா? ஹனிமூன் செல்ல சூப்பரான இடங்கள்!

Anoj

தேனிலவு இடங்கள்

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் திருமணம் செய்துகொண்ட புதுமண ஜோடிகள், தேனிலவு கொண்டாட்டத்திற்கு செல்ல சரியான இடம் எது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

ஆலப்புழா, கேரளா

படகு வீடு, இயற்கை அழகு மற்றும் காயல் பயணத்திற்கு பெயர்பெற்ற ஆலப்புழா, தேனிலவை மிகவும் ரொமான்டிக் ஆக கொண்டாட ஏற்ற இடமாகும்

Image Source: istock

கோவா

ஜூலை, ஆகஸ்ட் மாதம் கோவாவில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதால், உங்க துணையுடன் கடற்கரையில் தனிமையில் நேரத்தை செலவிடலாம். ஏராளமான தண்ணீர் சாகசங்களில் ஈடுபட செய்யலாம். குறிப்பாக, ரொமான்டிக் நைட் டேட்டிங் அனுபவத்தை பெற முடியும்

Image Source: instagram-com

காங்டாக், பெல்லிங் நகரம்

சிக்கிமின் காங்டாக் மற்றும் பெல்லிங் நகரங்கள், இமயமலையின் பிரம்மிப்பூட்டும் காட்சிகளை வழங்குவதால், தேனிலவுக்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்கு துணையுடன் நேரத்தை செலவிட ஏராளமான ரொமான்டிக் ஸ்பாட் உள்ளது

Image Source: unsplash-com

ஊட்டி, கொடைக்கானல்

தமிழ்நாட்டில் ஹனிமூன் செல்வதற்கு ஊட்டி மற்றும் கொடைக்கானலை தாராளமாக தேர்வு செய்யலாம். தாவரவியல் பூங்கா, தேயிலை தோட்டங்கள், பசுமையான காடுகளை ஆராய செய்யலாம். ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்வதால், குளிர் காலநிலையை அனுபவிக்க முடியும்

Image Source: unsplash-com

லோணாவ்லா & கண்டாலா

மகாராஷ்டிராவில் இந்த இரண்டு இடங்களும் வெறும் 4.6 கி.மீ., தொலைவில் உள்ளது. இவை பசுமையான நிலப்பரப்பு, வரலாற்று கோட்டைகள், பழங்கால குகைகள், ஏரிகள் மற்றும் மயக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர்பெற்றது

Image Source: unsplash-com

பச்மரி

இது மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் அழகிய மலை வாசஸ்தலமாகும். இங்கு சட்புரா தேசிய பூங்கா, தூப்கார்க், நீர்வீழ்ச்சிகள், குகைகள் என ஏராளமான ஸ்பாட்ஸ் இருப்பதால், உங்க துணையுடன் தாராளமாக ஹனிமூன் பயணத்திற்கு திட்டமிட செய்யலாம்

Image Source: unsplash-com

கோபால்பூர்

சூப்பரான பீச் அனுபவத்தை உங்க துணையுடன் பெற விரும்பினால், ஒடிசாவில் உள்ள கடற்கரை நகரமான கோபால்பூருக்கு செல்லலாம். இங்கு சூரிய உதயம் (அ) சூரிய அஸ்தமனத்தை ரசித்தப்படியே அழகிய படகு சவாரி மேற்கொள்ளலாம்.

Image Source: unsplash-com

டார்ஜிலிங்

தேனிலவுக்கு பெயர்பெற்ற டார்ஜிலிங் நகரத்திற்கு, ஜூலை மற்றும் ஆக்ஸ்ட் மாதங்களில் தவறாமல் செல்லலாம். தேயிலை தோட்டங்களை சுற்றிப்பார்ப்பது முதல் டாய் ட்ரெயின் பயணம் வரை, பல ரொமான்டிக் நிகழ்வுகளை புதுமண ஜோடிக்கு டார்ஜிலிங் தரக்கூடும்

Image Source: istock

Thanks For Reading!

Next: கட்டுமானத்தின் உச்சம் Burj Khalifa; வியக்க வைக்கும் தகவல்கள்!

[ad_2]