Jun 10, 2024
ஒரு சிலர் வீட்டின் அறைக்குள் நுழைந்து எதற்காக வந்தோம் என்பதை மறந்து விடுவார்கள் (அ) அவர்களால் நினைவில் வைக்க முடியாது. இதற்குப் பெயர் தான் டிமென்ஷியா. இந்த ஞாபகம் மறதி ஏற்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Image Source: istock
பொதுவாகவே 65 வயதிற்கு மேற்பட்டோர் ஞாபக மறதியால் அவதிப்படுவார்கள். நினைப்பாற்றல் இழப்பு சாதாரண வேலைகளை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்வது மற்றும் திடீர் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.
Image Source: pexels-com
ஒரு சிலருக்கு குடும்ப வரலாறு காரணமாக அல்லது மரபியல் காரணமாக ஏற்படலாம். இது ஒரு வகையான அல்சைமர் என்று கூட சொல்லலாம்.
Image Source: istock
டிமென்சியா பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உயரத்தால்தான் இன்றைய காலகட்டத்தில் வயது வரம்பு இன்றி அனைவரும் உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறோம்.
Image Source: istock
நீரிழிவு நோயாளிகளும் சர்க்கரை நோயாளிகளும் அடிக்கடி ஞாபக மறதி ஆகிவிடுவார்கள். இதற்கு காரணம் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் வீக்கம் மூளையை பாதிக்கக்கூடும்.
Image Source: istock
டிமென்ஷியா என்று கூறப்படும் இந்த ஞாபகம் மறதி ஏற்படுவதற்கு மது அருந்துவதும் ஒரு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் மது நம் மூளை செல்களை நேரடியாக பாதிக்கும்.
Image Source: istock
உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் மற்றும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக உடல் பருமன் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Image Source: istock
பெரும்பாலான நபர்கள் அடிக்கடி தனிமையில் இருப்பதால் கூட இந்த டிமென்ஷியா ஏற்படலாம். குறிப்பாக சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 27% இந்த டிமென்ஷியாவில் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
Image Source: pexels-com
ஒரு சில நேரங்களில் மன அழுத்த பிரச்சனைகள் இருந்தால் கூட ஞாபகம் மறதி ஏற்படலாம். ஆனால் இந்த மன அழுத்தம் நாள் பட்டதாக மாறும் போது இது உங்கள் மூளை ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
Image Source: pexels-com
Thanks For Reading!