May 28, 2024
டார்க் சாக்லேட்டில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் காணப்படும் நிலையில், இதனை உங்கள் டயட் வழக்கத்தில் எப்படி சேர்ப்பது? டயட் வழக்கத்தில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
டார்க் சாக்லேட்டில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் இரத்த அழுத்தம், இரத்த உறைவு போன்ற பாதிப்புகள் குறைகிறது. மேலும் பக்கவாதம், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
Image Source: istock
டார்க் சாக்லேட் உண்பதால் இதே ஆரோக்கியம் மேம்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது. இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Image Source: pexels-com
டார்க் சாக்லேட்டில் உள்ள பிளவனாய்டுகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
Image Source: istock
டார்க் சாக்லேட் உண்பதால் மன ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. மூளையில் நல்ல ரசாயனங்கள் சுரப்பதற்கு இது உதவுகிறது. மன அழுத்தத்தை குறைத்து ஒட்டு மொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
Image Source: istock
டார்க் சாக்லேட்டில் உள்ள பிரீபயாடிக்குகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
Image Source: istock
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள டார்க் சாக்லேட்டில் உள்ள கலவைகள் உதவுகின்றன. இதில் உள்ள பிளவனாய்டுகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளலாம்.
Image Source: istock
டார்க் சாக்லேட்டில் இரும்பு மெக்னீசியம் தாமிரம் போன்ற உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்க உதவும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
Image Source: istock
டார்க் சாக்லேட்டில் உள்ள பண்புகள் உடனே பசியை தூண்டாது என்பதால் அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இது உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது. பசியில் இருக்கும் போது சிறிதளவு டார்க் சாக்லேட்டை உட்கொள்ளலாம்.
Image Source: istock
Thanks For Reading!