[ad_1] டிராகன் மீது அமர்ந்து பறக்க ஆசையா? அப்போ இந்த Game விளையாடுங்க!

டிராகன் மீது அமர்ந்து பறக்க ஆசையா? அப்போ இந்த Game விளையாடுங்க!

Jun 27, 2024

By: mukesh M

டிராகனை கட்டுப்படுத்தலாம் வாங்க!

டிராகன் எனும் ராட்சத உயிரனத்தை மையப்புள்ளியாக வைத்து வடிவமைக்கப்பட்ட Video Game-களில், டிராகன்களை கட்டுப்படுத்த அனுமதிக்கும் Video Games ஒரு சிலவற்றை பற்றி இங்கு காணலாம்!

Image Source: play-google-com

Spyro Reignited Trilogy

2018-ஆம் ஆண்டு வெளியான இந்த Spyro Reignited Trilogy, மிகவும் பிரபலமான ஒரு டிராகன் விளையாட்டு ஆகும். 3டி அம்சத்துடன் வெளியான இந்த விளையாட்டு, உலக அமைதிக்காக பல்வேறு உலகத்திற்கு பயணித்து, எதிரிகளை அழிக்கும் ஒரு வேடிக்கை விளையாட்டு ஆகும்.

Image Source: play-google-com

The I Of The Dragon

2004-ஆம் ஆண்டு PC-ல் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு RPG வகை விளையாட்டு. இந்த விளையாட்டில் பயனர்கள் டிராகன்களை வளர்ப்பதில் துவிங்கி வழிநடத்துவது, கட்டுப்படுத்துவது என, அவர்களுடன் ஒன்றி வாழும் ஒரு விளையாட்டு ஆகும்.

Image Source: play-google-com

Divinity II: Developer's Cut

டிராகன்கள் நிறைந்த ஒரு கற்பனை உலகில் நடக்கும் போர்களத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு RPG வகை விளையாட்டாக இது உள்ளது. இந்த விளையாட்டில் பயனர்கள் டிராகனாகவும் விளையாட முடியும், டிராகனை க்டுப்படுத்தும் வீரராகவும் விளையாட முடியும்.

Image Source: play-google-com

Hoard!

Hoard - ஆக்ஷன் அம்சங்களுக்கு பஞ்சம் இல்லா ஒரு Strategy Game. பல்வேறு வகை சவால்களுடன் போட்டியாளர்களின் புத்தி கூர்மையை சோதிக்கும் ஒரு நிகழ்நேர திட்டமிடல் விளையாட்டாகவும் இது உள்ளது.

Image Source: play-google-com

The Elder Scrolls V: Skyrim - Dragonborn

கற்பனை உலகில் நிகழும் ஒரு உயிர் மீட்பு போராட்டத்தை இந்த விளையாட்டின் மூலக்கதை பின்பற்றுகிறது. விளையாட்டின் நாயகன், கொடிய டிராகனின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிணைய கைதிகளை மீட்க, சோல்ஸ்தீம் தீவுக்கு பயணிப்பதே இந்த விளையாட்டின் முழு கதை!

Image Source: play-google-com

Fire And Steel!

Fire And Steel ஆனது ஒரு Simulator வகை விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் போட்டியாளர்கள் ராட்சத டிராகனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, ஆட்டிப்படைக்க முடியும்!

Image Source: play-google-com

Breath of Fire III!

3D அம்சத்துடன் வெளியான ஒரு RGP வகை விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் போட்டியாளர்கள் Ryu எனும் மையப்பாத்திரம் ஏற்று, தனக்கு அளிக்கப்பட்ட டிராகனை தயார் செய்ய வேண்டி இருக்கும்.

Image Source: play-google-com

ARK: Survival Evolved!

ARK: Survival Evolved ஒரு 3D sandbox Game ஆகும். தனித்தீவில் விடப்பட்ட மனிதர்கள் விலங்குகளுடன் சண்டையிட்டு, அங்குள்ள பொருட்களை சேகரிப்பதே இந்த விளையாட்டின் ஒரு வரி சுருக்கம் ஆகும்!

Image Source: play-google-com

Thanks For Reading!

Next: GTA-க்கு சவால் விடும் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கேம்.. விளையாடி பாருங்க!

[ad_2]