Jun 26, 2024
டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு அதிக முறை சென்ற அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. 2007, 2009, 2010, 2012, 2021, 2022 என 6 முறை சென்றுள்ள பாகிஸ்தான், 2024 டி20 உலக கோப்பையில் அந்த வாய்ப்பை தவறவிட்டது
Image Source: x-com
இந்த பட்டியலில் இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது. 2007,2014, 2016, 2022 மற்றும் 2024 டி20 கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் 2007ல் டி20 உலக கோப்பையும் இந்தியா கைப்பற்றியது
Image Source: instagram-com
இங்கிலாந்து அணியும் 5 முறை, டி20 உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 2010, 2016, 2021, 2022 மற்றும் 2024 ஆகும். இதில் 2 முறை உலக கோப்பையை இங்கிலாந்து வென்றுள்ளது
Image Source: x-com
ஆஸ்திரேலியா அணி 2007, 2010, 2012, 2021 என 4 முறை டி20 உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 2021 சாம்பியனான ஆஸ்திரேலியா, 2024ல் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது
Image Source: x-com
வெஸ்ட் இண்டீஸ் அணி 2009, 2012,2014 மற்றும் 2016 என 4 முறை டி20 உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு சென்றுள்ளது. இதில் 2012 மற்றும் 2014ல் டி20 உலக கோப்பையும் வென்று அசத்தியுள்ளது
Image Source: x-com
நியூசிலாந்து அணியும் 4 முறை டி20 உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு சென்றுள்ளது. 2007, 2016, 2021 மற்றும் 2022ல் சென்ற நிலையில், இதுவரை ஒரு முறையும் கோப்பையை வெல்லவில்லை
Image Source: x-com
இலங்கை அணி 2009, 2010, 2012 மற்றும் 2014 என 4 முறை டி20 உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 2014ல் கோப்பையை வென்ற இலங்கை, 2024 டி20 உலக கோப்பையில் குரூப் ஸ்டேஜில் எலிமினேட் ஆனது
Image Source: x-com/icc
தென்னாப்பிரிக்கா அணி 2009, 2014 மற்றும் 2024 என 3 முறை டி20 உலக கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு சென்றது கிடையாது
Image Source: x-com/icc
டி20 உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 2024 டி20 உலக கோப்பை ஆப்கானிஸ்தானுக்கு சிறந்த தொடராக அமைந்துள்ளது
Image Source: x-com
Thanks For Reading!