May 18, 2024
சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்
Image Source: instagram-com/chennaiipl
சிக்சர் மன்னன் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷிவம் துபே, 2024 டி20 உலக கோப்பையின் இந்திய அணியில் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார். ஐபில் தொடரை போலவே இந்தியாவுக்காக சிக்சர்களை பறக்கவிடுவார் என ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்
Image Source: instagram-com/chennaiipl
சிஎஸ்கே அணியின் ஆல்டைம் ஃபேவரைட் ஆல்ரவுண்டரான மோயின் அலி, டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்
Image Source: instagram-com/chennaiipl
2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் டேரில் மிட்செல். இவர் 2024 டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கும் வகையில் பவுலிங் போடும் திறனும் கொண்டுள்ளார்
Image Source: instagram-com/chennaiipl
குட்டி மலிங்கா என அழைக்கப்படும் மதீஷா பத்திரனா, சிஎஸ்கே அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதப்படுகிறார். அவர் பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தயங்கிய நிலையில், 2024 டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்
Image Source: instagram-com/chennaiipl
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, முதல் ஐபிஎல் சீசனிலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக திகழ்கிறார். அவர் நியூசிலாந்து அணியின் டி20 உலக தொடரில் இடம்பிடித்துள்ளார்
Image Source: instagram-com/chennaiipl
ஐபிஎல் 2024ல் சிஎஸ்கே அணிக்காக மிட்செல் சான்ட்னர் பெரிதாக விளையாடவில்லை என்றாலும், முந்தைய சீசன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆல்ரவுண்டரான இவர் டி20 உலக கோப்பையின் நியூசிலாந்து அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்
Image Source: x-com/cskfansofficial
சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவன் கான்வே, கட்டை விரல் காயம் காரணமாக ஐபிஎல் 2024-ல் விளையாடும் வாய்ப்பை தவறிவிட்டார். ஆனால், இவர் டி20 உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்லில் மிஸ் செய்த கான்வே ஆட்டத்தை, உலக கோப்பையில் நிச்சயம் காண முடியும்
Image Source: facebook-com/thechennaisuperkings
சிஎஸ்கே அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான மஹீஸ் தீக்ஷனா, டி20 உலக கோப்பையின் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்
Image Source: facebook-com/knockoutsl
Thanks For Reading!