[ad_1] டி20 உலக கோப்பையில் மிரட்ட காத்திருக்கும் 'KKR' வீரர்கள்

டி20 உலக கோப்பையில் மிரட்ட காத்திருக்கும் 'KKR' வீரர்கள்

Anoj

May 27, 2024

ஐபிஎல் 2024 சாம்பியன்

ஐபிஎல் 2024 சாம்பியன்

ஐபிஎல் 2024 சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களில், யாரெல்லாம் 2024 டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறார்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்

Image Source: instagram-com/rinkukumar12

ஃபில் சால்ட்

கேகேஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட், 2024 டி20 உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் ஐபிஎல் 2024 தொடரில் 435 ரன்கள் குவித்துள்ளார்

Image Source: instagram-com/phil_salt

ரஹ்மானுல்லா குர்பாஷ்

ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஷ், 2024 டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் கேகேஆர் அணிக்காக பிளே ஆப்பில் நேரடியாக களமிறங்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

Image Source: instagram-com/rahmanullah-gurbaz

ஆண்ட்ரே ரஸல்

கேகேஆர் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரஸல், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

Image Source: instagram-com

ஷெர்பான் ரூதர்போர்ட்

ஐபிஎல் 2024 தொடரில் கேகேஆர் அணியில் விளையாட ஷெர்பான் ரூதர்போர்ட்-க்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால், டி20 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் மிக முக்கியமான வீரராக கருதப்படுகிறார்

Image Source: instagram-com/sherfane-r

மிட்செல் ஸ்டார்க்

கேகேஆர் அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக மிட்செல் ஸ்டார்க் கருதப்படுகிறார். அவர் 2024 டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஆவார்

Image Source: instagram-com/kkriders

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் மிட்செல் ஸ்டார்க். அவரை கேகேஆர் அணி ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவர் 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்

Image Source: instagram-com/mstarc56

துஷ்மந்த சமீரா

2024 டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணியில் துஷ்மந்த சமீரா மிகவும் முக்கியமான வீரர் ஆவார். ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் அவரது திறமையை நிரூபிக்க கேகேஆர் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை

Image Source: instagram-com/kkriders

ரிங்கு சிங்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் உள்ளார். அவர் கேகேஆர் அணிக்காக ஐபிஎல் 2024 தொடரில் 168 ரன்கள் எடுத்துள்ளார்

Image Source: instagram-com/rinkukumar12

Thanks For Reading!

Next: IPL வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர்கள்!

[ad_2]