[ad_1] டி20 உலக கோப்பை வரலாற்றில் சிறந்த வீரர் யார் தெரியுமா?

டி20 உலக கோப்பை வரலாற்றில் சிறந்த வீரர் யார் தெரியுமா?

Anoj

May 29, 2024

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

டி20 தொடரின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக கிறிஸ் கெய்ல் திகழ்கிறார். அவர் டி20 உலக கோப்பையில் 33 போட்டிகளில் 965 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 சதங்களும் அடங்கும்

Image Source: x-com/icc

ரோஹித் சர்மா

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும், டி20 உலக கோப்பையின் சிறந்த வீரர் ஆவார். டி20 உலக கோப்பையின் அனைத்து சீசன்களிலும் ரோஹித்தின் கைவண்ணம் உள்ளது. அவர் 39 போட்டிகளில் 963 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 5 அரை சதங்கள் அடங்கும்

Image Source: instagram-com

விராட் கோலி

ரன் மிஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, டி20 உலக கோப்பையிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். 27 ஆட்டங்களில் 1141 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்தவர் என்கிற சாதனையை படைத்துள்ளார். அதில் 14 அரை சதங்கள் அடங்கும்

Image Source: instagram-com/virat-kohli

ஏபிடி வில்லியர்ஸ்

கிரிக்கெட்டின் 360 டிகிரி என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ், டி20 உலக கோப்பையில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் 30 போட்டிகளில் 717 ரன்கள் எடுத்துள்ளார்

Image Source: x-com/icc

கெவின் பீட்டர்சன்

டி20 உலக கோப்பையில் விளையாடியுள்ள 15 ஆட்டங்களிலே 580 ரன்களை கெவின் பீட்டர்சன் குவித்துள்ளார். 2010ல் டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்தார்

Image Source: facebook-com/icc

எம்எஸ் தோனி

டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த வீரராக மகேந்திர சிங் தோனி கருதப்படுகிறார். அவர் வழிநடத்திய இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையை வென்றது. மேலும், 2014ல் இறுதிப்போட்டி வரை சென்றது

Image Source: x-com/espncricinfo

ஷாஹித் அப்ரிடி

டி20 உலக கோப்பையின் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாஹித் அப்ரிடி. 2009 டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவர் மொத்தமாக 546 ரன்களும், 39 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்

Image Source: x-com/icc

டுவைன் பிராவோ

இவர் டி20 உலக கோப்பையின் மதிப்புமிக்க வீரர் ஆவர். அணியின் தேவைக்கேற்ப மேட்சின் இறுதி ஓவர்களில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அதிரடி காட்டக்கூடிய திறன் கொண்டவர்

Image Source: x-com/icc

மலிங்கா

T20 பந்துவீச்சாளர்களில் மிகவும் திறமையானவர் லசித் மலிங்கா. அவரது யார்க்கர் மற்றும் ஸ்லோ டெலிவரி பந்துகளை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணற செய்வார்கள். அவர் டி20 உலக கோப்பையில் 31 ஆட்டங்களில் 38 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்

Image Source: x-com/icc

Thanks For Reading!

Next: T20 உலக கோப்பை சாதனைகள் - விராட் கோலி பதிவு செய்த 5 சாதனைகள்!

[ad_2]