[ad_1] டி20 உலக கோப்பை 2024-ல் விளையாடும் வயதான வீரர்கள் யார் தெரியுமா?

டி20 உலக கோப்பை 2024-ல் விளையாடும் வயதான வீரர்கள் யார் தெரியுமா?

Anoj

Jun 4, 2024

ரோஹித் சர்மா

உலக கோப்பைக்கான இந்திய அணியில் மிகவும் வயதான நபராக ரோஹித் சர்மா திகழ்கிறார். அவருக்கு 37 வயதாகிறது. அவர் விளையாடும் கடைசி டி20 உலக கோப்பை தொடர் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது

Image Source: instagram-com/rohitsharma45

முகமது நபி

முகமது நபி

ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபிக்கு 39 வயதாகிறது. இவர் டி20 போட்டிகளில் ஆப்கான் அணிக்காக அதிக ரன்களும் எடுத்தவரும் ஆவார்

Image Source: instagram-com/mohammadnabi07

ஆண்ட்ரூ ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்ட்ரூ ரஸல்-க்கு 36 வயதாகிறது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறனை கொண்ட ரஸல், ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்தினார்

Image Source: x-com/cricketworldcup

மோயின் அலி

இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆன மோயின் அலிக்கு தற்போது 36 வயது ஆகிறது. ஐபிஎல் 2024ல் ஜொலிக்க தவறிய மோயின் அலி, டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்

Image Source: instagram-com/moeenmunirali

ஏஞ்சலோ மேத்யூ

இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூக்கு 36 வயது ஆகிறது. 2009 டி20 உலக கோப்பையில் ரன்னர் அப் மற்றும் 2014ல் கோப்பையை வென்ற அணியில் மேத்யூ இடம்பிடித்திருந்தார். இது அவர் விளையாடும் கடைசி உலக கோப்பையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது

Image Source: instagram-com/ange69mathews

மேத்யூ வேட்

ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட்-க்கு 36 வயது ஆகியது. இவர் ஓப்பனராகவும், மிடில் ஆர்டரிலும் விளையாடும் திறன் கொண்டவர்.

Image Source: x-com/icc

மஹ்முதுல்லா ரியாத்

பங்களாதேஷை சேர்ந்த மஹ்முதுல்லா ரியாத்-க்கு 38 வயதாதிறது. இந்த தொடருடன் டி20 உலக கோப்பை விட்டு விலக அதிக வாய்ப்புள்ளது

Image Source: x-com/mahmudullah30

இமாத் வாசிம்

பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இமாத் வாசிம் திகழ்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கும் இமாத் வாசிம், டி20 தொடரில் பல சாதனைகளை புரிந்துள்ளார்

Image Source: instagram-com/imadwasim

டிம் சவுதி

நியூசிலாந்து அணியின் திறமையான பந்துவீச்சளாரான டிம் சவுதிக்கு தற்போது 35 வயது ஆகிறது. உலக கோப்பை டி20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை சவுதி சாய்த்துள்ளார்

Image Source: instagram-com/tim_southee

Thanks For Reading!

Next: T20 WC 2007 சாம்பியன்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

[ad_2]