[ad_1] டெஸ்டில் அதிவேக 'அரை சதம்' அடித்த வீரர்கள்

டெஸ்டில் அதிவேக 'அரை சதம்' அடித்த வீரர்கள்

Anoj, Samayam Tamil

Aug 2, 2024

மிஸ்பா உல் ஹக்

மிஸ்பா உல் ஹக்

2014ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் அரை சதம் விளாசி மிஸ்பா-உல்-ஹக் அசத்தினார். அவரது சாதனை இன்றும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நீடிக்கிறது

Image Source: x-com/icc

டேவிட் வார்னர்

2017ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்

Image Source: instagram-com

ஜாக் கலிஸ்

உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஜாக் கலிஸ், 2005ல் ஜிம்பாப்வே எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் அரை சதம் அடித்தார்

Image Source: facebook-com/icc

பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 2024ல் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஆட்டத்தில் தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். 24 பந்துகளில் மின்னல் வேகத்தில் அரை சதம் விளாசினார்

Image Source: x-com/icc

ஷேன் ஷில்லிங்ஃபோர்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஷேன் ஷில்லிங்ஃபோர்ட், 2014ல் நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்

Image Source: instagram-com

ஷாஹித் அப்ரிடி

2005ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷாஹித் அப்ரிடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 26 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்

Image Source: facebook-com/safridikingofsixes

டெல் ஸ்டெயின்

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டெல் ஸ்டெயின், 2014ல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஆட்டத்தில் வெறும் 26 பந்துகளில் அரை சதம் அடித்தார். யாரும் எதிர்பாராத பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்

Image Source: instagram-com

முகம்மது அஷ்ரபுல்

இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக அரை சதம் அடித்த மற்றொரு வீரராக பங்களாதேஷின் முகம்மது அஷ்ரபுல் திகழ்கிறார். 2007ல் நடந்த ஆட்டத்தில் 26 பந்துகளில் 50 ரன்களை தாண்டினார்

Image Source: instagram-com

இந்திய வீரர்கள் நிலவரம்?

டாப் 10 பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 2022ல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: Skateboarding முதல் Breakdancing வரை: நீங்கள் அறியாத Olympic விளையாட்டுகள்!

[ad_2]