Jul 13, 2024
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை வீசிய நபர் யார்? குறித்த இந்த வீரர் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்பது குறித்து விரிவாக இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். 1992-2010 இடைப்பட்ட காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தம் 44039 பந்துகள் வீசியுள்ளார்!
Image Source: twitter-com
1990 - 2008 இடைப்பட்ட காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய அனில் கும்ப்ளே மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் 40850 பந்துகள் வீசி இப்பட்டியலில் 2-ஆம் இடம் பிடிக்கின்றார்.
Image Source: twitter-com
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். 1992-2007 இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 145 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 40705 பந்துகள் வீசியுள்ளார்!
Image Source: twitter-com
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன். 2003 - 2024 இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40037 பந்துகளை வீசியுள்ளார்.
Image Source: twitter-com
2007 - 2023 இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வீரர். தனது டெஸ்ட் பயணத்தில் 167 போட்டிகளில் விளையாடிய இவர், மொத்தம் 33698 பந்துகளை வீசியுள்ளார்.
Image Source: twitter-com
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக சுமார் 13 ஆண்டுகள் விளையாடிய வீரர் நாதன் லியான். தனது டெஸ்ட் பயணத்தில் சுமார் 129 போட்டிகளில் பங்கேற்ற இவர் 32761 பந்துகளை வீசியுள்ளார்.
Image Source: twitter-com
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக; 1984 - 2001 இடைப்பட்ட காலத்தில் சுமார் 132 போட்டிகளில் பங்கேற்ற வீரர். தனது டெஸ்ட் பயணத்தில் மொத்தம் 30019 பந்துகளை வீசியுள்ளார்.
Image Source: twitter-com
1993 - 2007 இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர். மொத்தம் 124 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 29248 பந்துகளை வீசியுள்ளார்.
Image Source: twitter-com
Thanks For Reading!