Aug 21, 2024
சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் (MOS) விருது வென்ற இந்தியர் யார்? எத்தனை தொடர்கள் விளையாடி இந்த சாதனையை இவர்கள் செய்தனர்? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியாவிற்காக மொத்தம் 41 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 10 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விரேந்திர சேவாக், மொத்தம் 39 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 5 தொடர்களில் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.
Image Source: twitter-com
கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் வீரர் சச்சின் டெண்டுல்கர், மொத்தம் 75 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 5 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்!
Image Source: twitter-com
1983-ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில் தேவ், இந்தியாவிற்காக 38 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளார். இதின் 4 முறை தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்தியாவிற்காக மொத்தம் 47 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 4 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்ப்ந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. இந்தியாவிற்காக மொத்தம் மொத்தம் 51 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள இவர், மொத்தம் 4 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இந்தியாவிற்காக மொத்தம் 60 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 4 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்!
Image Source: twitter-com
முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், அதிரடி நாயகன் விராட் கோலி, சௌரவ் கங்குலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 3 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்!
Image Source: twitter-com
Thanks For Reading!