[ad_1] டேஸ்டியான 'மாம்பழ போளி' செய்வது எப்படி?

May 17, 2024

BY: Anoj

டேஸ்டியான 'மாம்பழ போளி' செய்வது எப்படி?

மாம்பழ போளி

மாம்பழத்தை பயன்படுத்தி சுவையான போளி எப்படி செய்யலாம் என்பதை இங்கு விரிவாக காணலாம்

Image Source: instagram-com/hebbars-kitchen

தேவையான பொருட்கள்

மாம்பழம் - 3; நாட்டு சர்க்கரை - 3 கப்; தேங்காய் துருவல் - 1 கப்; நெய் - 1 கப்; குங்குமப்பூ - சிறிதளவு; மைதா மாவு - 2 கப்; உப்பு - தேவைக்கேற்ப

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் பவுல் ஒன்றில், மைதா மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 2

மாம்பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

Image Source: pexels-com

செய்முறை படி - 3

அதை கடாய்க்கு மாற்றி நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்

Image Source: istock

செய்முறை படி - 4

கலவை கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்ததும் குங்குமப்பூ சேர்த்து தனியாக வைத்துவிடவும்

Image Source: istock

செய்முறை படி - 5

இப்போது வாழை இலையில் நெய் தடவி மைதா மாவு கலவையை உருண்டைகளாக உருட்டி அப்பளம் வடிவில் உருட்டிக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 6

பிறகு, தயாரித்த மாம்பழ பூரணத்தை சிறிய உருண்டைகளாக உருட்டி, அப்பள வடிவ மாவு கலவையில் வைக்க வேண்டும். அதன் மீது மற்றொரு அப்பள வடிவை மாவை வைத்து நன்றாக தட்டி, அழுத்திகொள்ளவும்

Image Source: instagram-com/jananivenkat_

டேஸ்டி போளி ரெடி

இப்போது, தோசைக்கல்லில் ரெடி செய்த கலவையை போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான், சுவையான மாம்பழ போளி ரெடி. இதன் இனிப்பு சுவை காரணமாக மக்களின் ஃபேவரைட் தின்பண்டமாக உள்ளது

Image Source: istock

Thanks For Reading!

Next: கேரளா ஸ்பெஷல் ‘பீட்ரூட் மணி கொழுக்கட்டை’ செய்முறை!

[ad_2]