May 15, 2024
By: Anojவெளிநாடுகளில் நம்மால் எளிதில் யூகிக்க முடியாத விநோதமான கலாச்சாரங்களை பின்பற்ற செய்வார்கள். அதன்படி, ஜப்பான் இளைஞர்களிடையே நட்பு திருமணம் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காணலாம்
Image Source: unsplash-com
ஒரு ஆணும் பெண்ணும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் நுழைந்தாலும், அவர்கள் இடையே எவ்விதமான உடல் நெருக்கமும் வேண்டாம் என மனப்பூர்வாக முடிவு செய்திருப்பார்கள்
Image Source: unsplash-com
நட்பு திருமணத்தில் குழந்தைகள் பெற்றுகொள்வதில் எவ்வித தடையும் கிடையாது. அவர்கள் செயற்கையான முறைகளில் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்க செய்யலாம்
Image Source: istock
ஒரே மாதிரியான பொழுதுபோக்கு மற்றும் விருப்பங்கள் கொண்ட பார்ட்னர் தேவைப்படுவதால் இந்த ட்ரெண்டை ஃபாலோ செய்கின்றனர். இது கிட்டத்தட்ட ரூம்மேட்-வுடன் தங்கியிருக்கும் உணர்வை தருவதாக நட்பு திருமணம் செய்தவர்கள் கூறுகின்றனர்.
Image Source: unsplash-com
நட்பு திருமணம் செய்தவர்கள் ஒன்றாக அல்லது தனித்தனியாக வாழ செய்யலாம். அதேபோல், இந்த திருமணம் செய்தவர்கள் பரஸ்பர உடன்படிக்கையின் அடிப்படையில் மற்றவர்களுடன் ரொமான்டிக் உறவு கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்
Image Source: pexels-com
நட்பு திருமணம் செய்தவர்கள் நிதி விஷயங்கள், சமையல் மற்றும் வீட்டு வேலைகளை ஒன்றாக சேர்த்து கவனித்துக்கொள்வார்கள். ஆனால், உடலுறவு என்ற விஷயத்தில் மட்டும் இருவருக்கும் சம்பந்தம் கிடையாது
Image Source: unsplash-com
இந்த வகையான உறவில் ஆர்வமுள்ளவர்கள் சராசரியாக 32 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது. அவர்களது மாத வருமானம் ஜப்பான் நாட்டு குடிமக்களின் சராசரி சம்பளத்தை விட அதிகமாகும்
Image Source: unsplash-com
இந்த புதிய திருமண உறவை, ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகமாக நாடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Image Source: unsplash-com
நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் இருப்பவர்கள், தங்களது பெற்றோரை மகிழ்விப்பதற்காக இந்த புதிய திருமண உறவை நாடுகின்றனர். ஜப்பானின் 124 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் பேர் நட்பு திருமணம் செய்துள்ளனர்
Image Source: unsplash-com
Thanks For Reading!