Jun 8, 2024
தங்கம் மிகவும் பிரபலமான விலை உயர்ந்த உலோகம் என்பதைத் தாண்டி அதன் தோற்றம் தொடங்கி நிறம் மற்றும் பண்புகள் வரை, தங்கத்தைப் பற்றிய நீங்கள் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.
Image Source: pexels-com
பூமியில் உள்ள தங்கத்தின் பெரும்பகுதி கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது கிரகத்தைத் தாக்கிய விண்கற்களினால் ஏற்பட்ட அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் உருவானது என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
Image Source: istock
சுத்தமான தங்கம் கைகளாலேயே வடிவமைக்கும் அளவிற்கு மென்மையானது. தங்கத்தை மிகவும் மெல்லிய தகடுகளாகத் தட்ட முடியும், இவை தான் சில உணவுகளில் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
Image Source: istock
பூமியின் அனைத்து கண்டங்களில் இருந்தும் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகப்படியான தங்கம் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து தான் கிடைத்துள்ளது.
Image Source: istock
உங்கள் உடலில் தங்கம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், ஒவ்வொரு மனிதரின் உடலிலும் சுமார் 0.2 மில்லி கிராம் தங்கமானது பெரும்பாலும் இரத்தத்தில் கலந்திருக்கும்.
Image Source: istock
கடல் நீரில் மில்லியன் டன் கணக்கிலான தங்கம் கரைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய டெக்னாலஜியை பயன்படுத்தித் தங்கத்தைப் பிரித்தெடுப்பது கிடைக்கும் தங்கத்தை விட அதிக செலவு வாய்ந்தது.
Image Source: istock
வைரமானது முற்றிலும் கார்பனால் ஆனது, கார்பன் பூமியில் மிக அதிகமாக உள்ள தனிமங்களுள் ஒன்று. ஆனால் தங்கமானது பூமியின் மேற்பரப்பில் ஒரு பில்லியனுக்கு 4 பாகங்கள் என்ற அளவில் மிக மிகக் குறைவாக உள்ளது.
Image Source: istock
தங்கம் பொதுவாக மஞ்சள் நிறத்தில் அறியப்பட்டாலும், அது உண்மையில் அதனுடன் கலக்கப்படும் உலோகங்களைப் பொறுத்து நிறம் மாறக்கூடியது. ரோஸ் கோல்ட் என்பது செம்பு கலந்ததும், வைட் கோல்ட் என்பது பல்லேடியம் கலந்த தங்கமும் ஆகும்.
Image Source: istock
தங்கம் இன்ஃப்ராரெட் கதிர்களைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் திறன் கொண்டது, மேலும் விண்வெளியின் கடுமையான சூழலில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் விண்கலங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
Image Source: istock
Thanks For Reading!