Jun 20, 2024
தினசரி காலை தண்ணீரில் ஜாதிக்காய் பொடியை சேர்ந்து குடித்து வர நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க! தெரிந்து கொள்வோம்.
Image Source: istock
தினசரி ஜாதிக்காய் நீரை அருந்தி வருவதால் மலச்சிக்கல், வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றன. ந்த ஜாதிக்காய் நீர் குடல் இயக்கத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
Image Source: istock
ஜாதிக்காயில் நமது உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெயைகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
Image Source: istock
இரத்த நாளங்களில் தேங்கும் கொலஸ்ட்ராலை கரைத்து, சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யும் இந்த ஜாதிக்காய் நீர் - இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, இதய ஆரோக்கியம் காக்கிறது!
Image Source: istock
ஜாதிக்காயில் இயற்கையாகவே நச்சினை நீக்கும் தன்மை உள்ளதால் கல்லீரல், சிறுநீரகங்களை சுத்தப்படுத்த இது உதவுகிறது. தினசரி ஜாதிக்காய் கலந்த நீரை அருந்துவது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
Image Source: istock
ஜாதிக்காயில் உள்ள மெக்னீசியம் மன அமைதியை ஊக்குவித்து சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. தூங்க செல்வதற்கு முன் தண்ணீரில் சிறிது ஜாதிக்காய் பொடி கலந்து குடித்து வர தூக்க பிரச்சனைகள் குணமாகும்.
Image Source: pexels-com
ஜாதிக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் நமது உடலில் நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி மறதி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
Image Source: istock
ஜாதிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வலி, வீக்கம் போன்ற பாதிப்புகளை சரிசெய்ய உதவுகிறது. மூட்டு வலி அல்லது தசை வலி பிரச்சனை உள்ளவர்கள் தினசரி ஜாதிக்காய் நீரை அருந்தலாம்.
Image Source: istock
ஜாதிக்காயில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த அழுத்த பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!