Jul 20, 2024
தன் வயதை காட்டிலும் முதுமையான பாத்திரத்தில் நடித்து; ரசிகர்களின் மனதை வென்ற நடிகர்கள் மற்றும் அவர்கள் நடித்த திரைப்படங்கள் குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: twitter-com
உலக நாயகன் கமல்ஹாசன் நாயகன் (1987) திரைப்படத்தில் 50 - 55 வயது நபராக நடித்திருப்பார்; அப்போது அவர் வயது 33. இதேபோன்று இந்தியன் (1996) திரைப்படத்தில் 90 வயது தாத்தாவாக நடித்தபோது இவர் வயது 42 மட்டுமே!
Image Source: instagram-com
கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் வீர் சாரா. இத்திரைப்படத்தில் நடிகர் ஷாரூக் கான் 50 - 55 வயது நபராக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடித்த போது இவருக்கு வயது 37 மட்டுமே!
Image Source: twitter-com
2015-ஆம் ஆண்டு வெளியான அலிகார் எனும் பாலிவுட் திரைப்படத்தில் முதுமை பாத்திரம் ஏற்று நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய். இத்திரைப்படத்தில் நடித்த போது இவரது வயது 44 மட்டுமே!
Image Source: twitter-com
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கார்த்தி, சர்தார் (2022) திரைப்படத்தில் 60 வயது முதியவராக நடித்த போது அவரின் உண்மையான வயது 45 மட்டுமே!
Image Source: twitter-com
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், 2018-ஆம் ஆண்டு வெளியான சஞ்சு எனும் திரைப்படத்தில் 60 வயது நபராக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் இவர் நடித்த போது ரன்பீரின் வயது 38 மட்டுமே!
Image Source: twitter-com
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017) திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் அஸ்வின் தாத்தா எனும் பாத்திரத்தில் 60 வயது நபராக நடித்திருப்பார். இதன் போது இவர் வயது 35!
Image Source: twitter-com
அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குரு. இத்திரைப்படத்தில் 60 வயது முதியவராக நடித்த அபிசேக் பச்சனுக்கு, அப்போது வயது 30!
Image Source: twitter-com
நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு ஆகியோர் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை. இத்திரைப்படத்தில் முதுமை பாத்திரத்தில் நடித்த சூப்பர் ஸ்டாரின் அப்போதைய வயது 41!
Image Source: twitter-com
Thanks For Reading!