Jul 18, 2024
By: mukesh Mஆடி மாதம் எனப்படுவது தமிழ் நாள்காட்டியின் மங்களகரமான மாதம் ஆகும். ஆடி கார்த்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடி பெருக்கு, ஆண்டாள் பூரம், வரலட்சுமி நோன்பு என இந்து சமயம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும் இந்த மாதம் குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்!
Image Source: istock
ஜூலை மாதம் பிற்பகுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் முடியும் இந்த ஆடி மாதத்தில் சூரியன் வடக்கில் இருந்து - தெற்கை நோக்கி பயணிக்கிறது. இதன் விளைவாக பகல் பொழுது குறைவாகவும் - இரவு பொழுது நீண்டும் இருக்கும்.
Image Source: istock
ஆடி மாதத்தில் நிலவும் இந்த கால பொழுது மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் நோன்பு, உணவு வழக்கம், சுப நிகழ்ச்சிகள் என பல்வேறு வாழ்கை மாற்றங்களை கடைபிடிக்க நம் முன்னோர்கள் பழக்கப்படுத்த, இன்றளவும் இந்த சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன!
Image Source: istock
ஆடி மாதங்களில் வெள்ளி (அ) செவ்வாய் கிழமைகளில் கிராமங்களில் கூழ் ஊற்றும் திருவிழா நடத்தப்படுவது உண்டு. இந்த திருவிழாவின் மூலம் நாம் அதிகம் உட்கொள்ளும் கூழ்; பருவநிலை மாற்றத்தால் ஆடி மாதத்தில் உண்டாகும் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது.
Image Source: istock
ஆடி மாதத்தின் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய நாட்களிலும், அமாவசை - பௌர்ணமி உள்ளிட்ட நாட்களிலும் தமிழ் நாட்டு பெண்கள் பலரும் விரதம் இருப்பது உண்டு. இந்த விரதங்கள், அடிப்படையில் பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது!
Image Source: istock
ஆடி மாதத்தில் திருமணத்தை தவிர்ப்பது, தாம்பத்திய உறவை தவிர்ப்பதன் முதல் படி ஆகும். இதன் காரணமாகவே, புது மண தம்பதிகள் கூட இந்த ஆடி மாதத்தில் பிரித்து வைக்கப்படுகிறார்கள்!
Image Source: istock
ஆடி மாதத்தில் தம்பதிகள் இணைவது, பத்தாம் மாதமான சித்திரை மாதத்தில் பிரசவத்திற்கு வழிவகுக்கும். அதாவது, கத்திரி வெயில் வரும் சிந்திரையில் குழந்தை பிரசவிப்பது என்பது, கர்ப்பிணிகளுக்கு சிரமமான காரியம் என்பதால், இந்த வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது!
Image Source: istock
ஆடி மாதத்தில் திருமணம் மட்டும் அல்ல, புதமனை புகுதல், காது குத்து மற்றும் பல சுபநிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது இல்லை. இதற்கான மிக முக்கிய காரணம், மக்கள் தங்கள் செலவை குறைத்து, ஓரளவுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்பதால் தான்!
Image Source: istock
பணத்தை சுப நிகழ்ச்சிகளில் செலவழிக்காமல், விவசாயத்தில் செல்விட்டு (மழை வரும் ஆடி மாதம் பயிரிட்டு), தை மாதம் அறுவடை செய்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக. விவசாய காலத்திற்கு தேவைப்படும் செலவினங்களை சமாளிக்க - சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர் நம் முன்னோர்கள்!
Image Source: instagram-com
Thanks For Reading!