Jun 12, 2024
திரைப்படங்களுக்கு இணையாக வெப் சீரிஸ் எனும் இணைய தொடர் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழில் வெளியாக வெற்றிக் கண்ட சில ‘திரில்லர் வெப் சீரிஸ்-கள்’ பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: instagram-com
2021-ஆம் ஆண்டு Disney+ Hotstar வெளியான ஒரு கிரைம் திரில்லர் சீரிஸ். தமன்னா பாட்டியா முதன்மை பாத்திரம் ஏற்று நடித்த இந்த இணையத்தொடர், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபல நாவலாசிரியரின் கொலை வழக்கை சுற்றி நகரும் தொடர் ஆகும்.
Image Source: instagram-com
2022-ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான இந்த இணையத்தொடரில் நடிகர் கதிர் முதன்மை பாத்திரம் ஏற்று நடித்தார். இளம்பெண் ஒருவர் மாயமாகும் சம்பவம், இந்த சம்பவத்தை தொடர்ந்து நடக்கும் மர்மங்களே இந்த தொடரின் கதை ஆகும்.
Image Source: instagram-com
நடிகர் விமல் நடிப்பில் வெளியான ஒரு குற்றப்புனைவு தொடர். ZEE5-ல் வெளியான இத்தொடரின் கதை; தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒரு காவல் துறை அதிகாரியின் வாழ்க்கை சுற்றி நகர்கிறது.
Image Source: instagram-com
நடிகர் நந்தா முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று நடிக்க 2019-ஆம் ஆண்டு SonyLIV-ல் வெளியான இணையத்தொடர். பரபரப்புக்கு பஞ்சம் இல்லா 9 எப்பிசோடுகளுடன் வெளியான இந்த தொடர், திரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற ஒரு சரியான தேர்வு!
Image Source: instagram-com
2021-ஆம் ஆண்டு MXPlayer-ல் வெளியான ஒரு குற்ற பின்னணி இணையத்தொடர். சனம் ஷெட்டி மற்றும் அசோக் குமார் முக்கிய பாத்திரம் ஏற்க உருவான இத்தொடர், பரபரப்புக்கு பஞ்சம் இல்லா ஒரு அசத்தல் தொடர் ஆகும்.
Image Source: instagram-com
2023-ஆம் ஆண்டு ZEE5-ல் வெளியான ஒரு திரில்லர் இணையத்தொடர். தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடக்கும் அரசியல் போரை கூறும் ஒரு திரில்லர் தொடராக இது உள்ளது.
Image Source: instagram-com
2020-ஆம் ஆண்டு ZEE5-ல் வெளியான ஒரு ஹாரர் - திரில்லர் தொடர். நடிகை பூர்ணா முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த இந்த இணைய தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லா 5 எபிசோடுகளுடன் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது!
Image Source: instagram-com
நடிகர் அதர்வா, மணிகண்டன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல முன்னசி திரை நட்சத்திரங்கள் நடிக்க 2023-ஆம் ஆண்டு Disney+ Hotstar-ல் வெளியான ஒரு திரில்லர் இணையத்தொடர்.
Image Source: instagram-com
Thanks For Reading!