May 8, 2024
ஒரு சில உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில்; குறிப்பிட்ட அந்த உணவு பொருட்கள் பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் இங்கு காணலாம்!
Image Source: pexels-com
தென்னிந்தியாவில் வெங்காயம் இல்லாத தயிர் பச்சடியை நம்மால் பார்க்க முடியாது. ஒரு சிலருக்கு இதனால் ஒவ்வாமை, வாயு தொல்லை, வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படலாம். தயிரில் குளிர்ச்சி பண்புகள் இருப்பதும், அதற்கு எதிர்மறையான பண்புகளை வெங்காயம் கொண்டிருப்பதே இதற்கு காரணம்.
Image Source: istock
பல வீடுகளில் தயிருடன் வெள்ளரிக்காயம் சேர்த்து உண்பதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் வெள்ளரிக்காய் மற்றும் தயிருக்கு இடையிலான மாறுபட்ட வெப்பநிலை காரணமாக செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல விதமான நன்மைகள் பாகற்காயில் இருந்தாலும், இதனை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக சருமம் சார்ந்த மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
தயிருடன் தக்காளியை சேர்த்து சாப்பிடும் போது, அதில் உள்ள அமிலத்தன்மை தயிருடன் சேரும்போது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி உணவு செரிமானத்தை தாமதமாக்கலாம்.
Image Source: istock
பால் சார்ந்த பொருட்களுடன் ஒத்துப் போகாத சில குணங்களை முள்ளங்கி கொண்டுள்ளது. தயிருடன் சேர்த்து முள்ளங்கியை சாப்பிடும் போது வாயுத்தொல்லை போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம்.
Image Source: istock
தயிரில் உள்ள நொதிகள் கத்திரிக்காயுடன் சேரும்போது உடலில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் தயிருடன் கத்தரிக்காயை சேர்த்து உண்பதை தவிர்க்கலாம்.
Image Source: istock
ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளில் ஒன்று கீரை. பல ஆரோக்கிய நன்மைகள் கீரைகளில் நிரம்பி இருந்தாலும் தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது சிறுநீரக கல் பாதிப்பு வரை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
Image Source: istock
மீன் மற்றும் தயிர் இரண்டிலும் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இவை இரண்டிலும் மாறுபட்ட புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
Image Source: istock
Thanks For Reading!