May 11, 2024
பளபளப்பான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் ஒன்றினை முட்டை, மருமாணி, தயிர், பீட்ரூட் கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
Image Source: istock
மருதாணி - 1 கப் | பீட்ரூட் - 1 | முட்டை - 1 | தயிர் - 3 ஸ்பூன் | காப்பி பொடி - 2 ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட பீட்ரூட்டை சிறு துண்டாக நறுக்கி சிறிதளவு தண்ணீருடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: pexels-com
பின் இதனுடன் காப்பி பொடி சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து, பின் நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
இச்சேர்மம் நன்கு ஆறியதும் இதில் மருதாணி, தயிர் சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் கரைத்து 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் முட்டை உடைத்து சேர்த்து ஒரு முறை கலந்து 10 - 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க ஹேர் மாஸ்க் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த ஹேர் மாஸ்கினை கூந்தலுக்கு அப்ளை செய்து - மசாஜ் செய்து 2 மணி நேரங்கள் வரை நன்கு ஊற வைக்கவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.
Image Source: istock
உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்ட தயிர், மருதாணி கலவையில் தயார் ஆகும் இந்த ஹேர் மாஸ்க் ஆனது, கூந்தல் வறட்சி பிரச்சனையை தடுக்கிறது.
Image Source: istock
கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டகங்கள் பல நிறைந்த இந்த ஹேர் மாஸ்க் ஆனது, கூந்தல் ஆரோக்கியம் காப்பதோடு பளபளப்பான, பொலிவான கூந்தல் பெறவும் உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!