[ad_1] தயிர் வெண்டைக்காய் கூட்டு - செய்முறை!

Aug 21, 2024

தயிர் வெண்டைக்காய் கூட்டு - செய்முறை!

mukesh M

தயிர் வெண்டைக்காய் கூட்டு!

வெண்டைக்காயை அவித்து, தயிர் மற்றும் சில மசாலா பொருட்களுடன் சேர்த்து வித்தியாசமான முறையில் கூட்டு ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

வெண்டைக்காய் - 150கி | தயிர் - 1 கப் | மிளகாய் பொடி - 2 ஸ்பூன் | உப்பு - 1 ஸ்பூன் | மஞ்சள் - 1 ஸ்பூன் | மல்லி பொடி - 1 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

எலுமிச்சை பழம் - 1 | வெங்காயம் - 2 | பச்சை மிளகாய் - 2 | கடலை மாவு - 3 ஸ்பூன் | எண்ணெய் - போதுமான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட வெண்டைக்காயினை சுதம் செய்து, சிறு துண்டாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் தண்ணீருடன் வைத்து, இட்லி அவித்து எடுப்பது போல் அவித்து எடுக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

இதனிடையே அகன்ற பாத்திரம் ஒன்றில் தயிருடன் மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, மல்லி பொடி சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும். அதேநேரம் எலுமிச்சை பழத்தை நறுக்கி சாறு புழிந்துக்கொள்ளவும்!

Image Source: pexels-com

செய்முறை படி - 3

தொடர்ந்து எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தற்போது அவித்த வெண்டைக்காயுடன் கலந்து வைத்த தயிர் சேர்மம் சிறிதளவு மற்றும் கடலை மாவு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கள் வரை உலர விடவும்!

Image Source: istock

செய்முறை படி - 5

தற்போது கூட்டு தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் இதனுடன் தயிர் சேர்மத்தை சேர்த்து வதக்கவும!

Image Source: istock

தயிர் வெண்டைக்காய் கூட்டு ரெடி!

பின் இறுதியாக இதனுடன் தயிரில் ஊற வைத்த வெண்டைக்காய் சேர்த்து கிளறி, 4 - 5 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்க சுவையான தயிர் - வெண்டைக்காய் கூட்டு ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: சுவையும், சத்தும் நிறைந்த 'பிரண்டை சூப்' செய்முறை

[ad_2]