Jun 7, 2024
By: mukesh Mவீட்டு தரையை சுத்தம் செய்யும் போது நாம் செய்யும் தவறுகள் என்ன? இந்த தவறுகளை தவிர்ப்பதற்கான வழிகள் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்.
Image Source: pexels-com
வீட்டு தரைகளை துடைக்கும் முன், தரையில் உள்ள குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்வது அவசியம். குப்பைகளை பெருக்காமல் வீட்டை துடைப்பது, தரையின் கறை படிவதற்கு வழிவகுக்கும்!
Image Source: istock
வீட்டை துடைக்க பயன்படுத்தும் ரசாயனத்தை (floor cleaner திரவங்களை) அளவுக்கு மிகுதியாக பயன்படுத்துவது, அறையின் ஒவ்வமை வாடைக்கு வழிவக்கும். எனவே, அளவாக பயன்படுத்துங்கள்.
Image Source: istock
தரையில் உள்ள கறைகளை போக்கு ஒரு பாத்திரம் தேய்க்கும் ஸ்டீல் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்ப்பது உண்டு. இவ்வாறு ஸ்க்ரப்பர் பயன்படுத்துவது தரையில் கீறல்கள் விழச்செய்யும். எனவே, ஸ்க்ரப்பர்களுக்கு பதில் பழைய துணிகளை பயன்படுத்தலாம்.
Image Source: istock
வீட்டு தரையை குறிப்பிட்ட இடைவெளியில் துடைப்பது அவசியம். வீடு சுத்தமாக உள்ளது என நினைத்து அப்படியே துடைக்காமல் விடுவது, தரையின் பொலிவை பாழாக்கும்.
Image Source: istock
வீட்டு தரையை துடைக்க பயன்படுத்தும் floor cleaner-கள் அனைத்தும் பூச்சிகளை விரட்டுவது இல்லை. எனவே, வீட்டை துடைத்த பின்னர் பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே பயன்படுத்துவது நல்லது!
Image Source: istock
வீடு முழுவதையும் துடைக்க ஒரே mop பயன்படுத்துவது நல்லது அல்ல. ஒரே mop பயன்படுத்தும் போது, mop-ன் ஈரம் தரையில் தூசிகளை தங்க வைப்பதோடு, கறைகளை உண்டாக்கும். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட mop பயன்படுத்துங்கள்.
Image Source: istock
தரையை சுத்தம் செய்வதில் mop-ன் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். எனவே, mop-ன் சரியான வடிவத்தை தேர்வு வீட்டின் மூலை முடுக்குகளிலும் முழுவதுமாக சுத்தம் செய்யுங்கள்.
Image Source: istock
தரையை சுத்தம் செய்து முடித்த பின் சுத்தம் செய்ய பயன்படுத்திய mop, பக்கெட் உள்ளிட்டவற்றை உடனடியாக சுத்தம் செய்து உலர்த்துவது அவசியம். அழுக்கு தண்ணீருடன் அப்படியே விடுவது மறு பயன்பாட்டின் போது சிரமங்களை உண்டாக்கும்!
Image Source: istock
Thanks For Reading!