[ad_1] தலைமுடியை ட்ரிம் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா? உண்மை என்ன?

Jul 17, 2024

தலைமுடியை ட்ரிம் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்குமா? உண்மை என்ன?

Anoj

ஹேர் ட்ரிம்மிங்

நீளமான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு ட்ரிம்மிங் செய்வது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உங்க ஹேர் ஸ்டைல் மற்றும் முடியின் தன்மை பொறுத்து ட்ரிம் செய்யும் காலம் மாறுபடக்கூடும். இதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: pexels-com

ட்ரிம் செய்யும் காலம்

அடர்த்தியான தலைமுடியை பெற 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ட்ரிம் செய்திட வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு மென்மையான தலைமுடியை பெற முடியும்

Image Source: istock

ஹேர் ஸ்டைல் ட்ரிம்மிங்

நீங்கள் Crop அல்லது Pixie ஹேர் கட் செய்திருந்தால், 3 அல்லது 4 வாரத்திற்கு ஒருமுறை கட் செய்ய வேண்டும். Bobs ஹேர் கட்டிற்கு 2 மாதங்கள் ஒரு முறை வெட்டலாம். அதேபோல், நீளமான கூந்தலுக்கு 4 மாதங்கள் ஒருமுறை வெட்டுவது போதுமானது ஆகும்

Image Source: istock

ஹேர் ட்ரிம்மிங் பிறகு.,

தலைமுடியை ட்ரிம் செய்தப்பிறகு நெல்லிக்காய், ரோஸ்மேரி மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெயை கூந்தலில் தடவ வேண்டும். இவை தலைமுடியை மென்மையாக்குவது மட்டுமின்றி பளபளப்பை தரக்கூடும்

Image Source: istock

உச்சந்தலை மசாஜ்

தலைமுடியை வெட்டியப்பிறகு உச்சந்தலையை மசாஜ் செய்வது, மயிர்கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கக்கூடும்

Image Source: istock

ட்ரிம் செய்யாமல் இருந்தால் என்னவாகும்?

தலைமுடியை நீண்ட நாட்கள் ட்ரிம் செய்யாமல் இருந்தால், முடி வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பிளவுப்பட்ட முடிகள் மயிர்கால்களை வரை சென்று முடி உடைய வழிவகுக்கலாம்.

Image Source: istock

ஹேர் கட் பிறகு முடி வளராமல் இருப்பது?

சில நேரங்களில் தலைமுடியை ட்ரிம் செய்தப்பிறகு நீண்ட நாட்களுக்கு முடி வளராதது போல் இருக்கக்கூடும். அதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான முடி பராமரிப்பு முக்கிய காரணங்களாகும்.

Image Source: istock

ஹேட் கட் முடியை நீளமாக்குமா?

தலைமுடியை வெட்டுவதால் முடி நீளமாக வளர செய்யாது. ஏனெனில், முடி வேர்களில் இருந்து வளரக்கூடும். ஆனால், நுனி முடியை ட்ரிம் செய்வது முடி உடைதலை தடுப்பதோடு முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்

Image Source: pexels-com

நிபுணர் சொல்வது என்ன?

தலைமுடியை ட்ரிம் செய்வது முடி வேகமாக வளர வழிவகுக்காது. ஆனால், முடி ஆரோக்கியத்தை பராமரித்து சீரான விகிதத்தில் வளர அனுமதிக்கும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தொடர்ச்சியான ஹேர் கட்டிங் மற்றும் சுத்தமான உச்சந்தலை அவசியமாகும்

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: முடி உதிர்தலை தடுக்க ஹேர் கண்டிஷனரை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்?

[ad_2]