May 13, 2024
முடியின் நீளத்தைப் பொருத்து 1-2 முட்டைகளை அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை கூந்தலில் தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு கழுவுங்கள். கூந்தல் வலிமையாக வளர உதவுகிறது.
Image Source: pexels-com
ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் 1-2 முட்டைகளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முடி களில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது கூந்தலை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
1-2 முட்டைகளுடன் தயிர் சேர்த்து கலந்து உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசுங்கள். இதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.
Image Source: istock
1-2 முட்டைகளுடன் தேன் சேர்த்து கலந்து முடியில் தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பொலிவான கூந்தலை பெற உதவுகிறது.
Image Source: istock
பழுத்த வாழைப் பழத்துடன் 1-2 முட்டைகளை கலந்து தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் வரை அப்படியே வைக்க வேண்டும். பிறகு கூந்தலை அலசிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
1-2 முட்டையுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெயை சேர்த்து உச்சந்தலை மற்றும் கூந்தலில் அப்ளை செய்யுங்கள். பிறகு 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு அலசுங்கள்.
Image Source: istock
பழுத்த அவகோடா பழத்தை மசித்து அதனுடன் 1-2 முட்டைகளை கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கூந்தல் ஆழ்ந்த ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது.
Image Source: istock
கற்றாழை ஜெல்லுடன் 1-2 முட்டைகளை சேர்த்து அடித்து உச்சந்தலையில் தடவிக் கொள்ளுங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முடி வளர்ச்சியை ஊக்குவிக்க பயன்படுகிறது.
Image Source: istock
முட்டையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை கூந்தலில் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து அலசுங்கள். கூந்தல் மென்மையாக இருக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!