Jul 10, 2024
தற்போதைய காலகட்டத்தில் அடிக்கடி ஹேர் ஸ்டைலிங் செய்வது, சுடுதண்ணீரில் குளிப்பது, கடுமையான ஷாம்பூக்களை பயன்படுத்துவது போன்ற காரணத்தினால் தலைமுடி வறட்சி ஏற்படுகிறது.
Image Source: istock
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனை தலைமுடியில் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி ஈரப்பதத்துடனும், ஊட்டச்சத்துடனும் வைத்திருக்க முடியும்.
Image Source: istock
வாழைப்பழத்தினை நன்கு மசித்து கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தயிர் உள்ளிட்டவைகளை கலந்து முடி மற்றும் முடியின் வேர்பகுதிகளில் படும்படி தடவி 30 நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் ரசாயனமில்லா ஷாம்பூ கொண்டு முடியை கழுவவும். இது முடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
Image Source: istock
வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள். அந்த நீரை முடியில் தேய்த்து கழுவி அப்படியே உலர்த்துங்கள். இதன் மூலம் தலைமுடி மென்மையாக மாற்றுவதோடு, பளபளப்பாகவும் இருக்க வைக்கும்.
Image Source: istock
ஒரு வாழைப்பழத்தை எடுத்து மிக்சியில் அரைத்து, அதில் ஒரு கப் தண்ணீர், ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்கு கலக்கி வடிக்கட்டி அந்நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி இதனை முடியில் அடிப்பதன் மூலம் முடி மென்மையான தோற்றம் மாற துவங்கும்.
Image Source: istock
இந்த முறைகளை வாரத்திற்கு 2 முதல் 3 முறைகளுக்கு மேல் நல்ல முடிவுகள் கிடைக்க பயன்படுத்துங்கள். பயன்படுத்துவதற்கு முன்னர் அதனை சிறிய இடத்தில் பயன்படுத்தி பரிசோதித்து கொள்வது நல்லது.
Image Source: Samayam Tamil
இந்த முறைகளை பயன்படுத்துவதால் உங்களுக்கு தலையில் ஏதேனும் பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக இந்த முறைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
Image Source: istock
வாழைப்பழத்தை தவிர்த்து ஆலிவ் ஆயில், தேன், தேங்காய் பால் உள்ளிட்ட பொருட்களையும் உங்களது தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
Image Source: istock
தற்போதைய அவசர உலகில் தலைமுடியை காயவைக்க பலரும் ஹேர் ட்ரையரை பயன்படுத்துகிறார்கள். இது முடிக்கு மிகவும் ஆபத்தினை விளைவிக்கக்கூடியது என்பதால் அந்த வழக்கத்தை கைவிடுவது நல்லது.
Image Source: istock
Thanks For Reading!