Jul 19, 2024
வெண்டைக்காயில் விட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது கூந்தலை பளபளப்பாகவும் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.
Image Source: istock
5-10 வெண்டைக்காய், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் வெந்தய விதைகள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
இப்பொழுது வெண்டைக்காயை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். இப்பொழுது அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
Image Source: istock
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வெண்டைக்காய், வெந்தயம், கற்றாழை ஜெல்லை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். இதை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
Image Source: pexels-com
தண்ணீர் பாதியாக வற்றும் வரை காத்திருந்து 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அவ்வப்போது நன்றாக கிளறி விட வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு ஒரு சல்லடையைக் கொண்டு வடிகட்டுங்கள். 15-20 நிமிடங்கள் வெண்டைக்காய் ஜெல்லை ஆற விடுங்கள்.
Image Source: istock
வெண்டைக்காய் ஜெல்லை ஒரு காற்று புகாத அல்லது கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வையுங்கள். சூரிய ஒளி படாத இடத்தில் வையுங்கள்.
Image Source: istock
இப்பொழுது இந்த வெண்டைக்காய் ஜெல்லை தலையில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவுங்கள்.
Image Source: istock
இந்த ஜெல்லை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல அடர்த்தியான கரு கருவென கூந்தல் கிடைக்கும்.
Image Source: istock
Thanks For Reading!