Jul 10, 2024
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2027ம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என சொல்லப்படுகிறது. அவர் முன் இருக்கும் முக்கிய சவால்களை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/gautamgambhir55
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி, 2024 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருக்கிறது. பார்டர் கவாஸ்கர் டிராபியை தொடர்ச்சியாக 5வது முறை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி செயல்பட்டு வருகிறது
Image Source: x-com
கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியின் முதலாவது ஐசிசி போட்டி சாம்பியன்ஸ் டிராபி ஆகும். இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
Image Source: x-com
2023-2025ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் சுழற்சியில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கவுதம் கம்பீருக்கு கிடைத்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளனர்.
Image Source: x-com
2025 கோடை மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதாக இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. 2007க்குப் பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் சிவப்பு பந்து தொடரை இந்தியா வெல்ல தயாராகிவருகிறது
Image Source: x-com
இது கவுதம் கம்பீர் பதவி காலத்தில் சொந்த நாட்டில் நடக்கும் ஒரே ஐசிசி போட்டியாகும். 2026 டி20 உலக கோப்பையை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றனர்
Image Source: x-com
சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது
Image Source: x-com
2027 ஒருநாள் உலக கோப்பை கவுதம் கம்பீரின் பதவிக்காலத்தின் முக்கிய அம்சமாகும். கடந்த முறை இறுதிப்போட்டியில் இந்தியா தவறவிட்ட வாய்ப்பை, இம்முறை வென்றுகாட்டும் வகையில் கவுதம் கம்பீர் செயல்படுவார்
Image Source: x-com
2025-27ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பில் அனைத்து போட்டிகளும் கவுதம் கம்பீர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்திய அணியை வெற்றிபாதைக்கு கட்டாயம் அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
Image Source: x-com
Thanks For Reading!