Aug 18, 2024
ஃபேஷியல் செய்வது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு இறந்த சரும செல்களை நீக்குகிறது. இது சரும துளைகளை திறந்து நன்கு சுத்தம் செய்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் கொண்ட க்ரீம்கள் பயன்படுத்தப்படுகிறது.
Image Source: pexels-com
ஃபேஷியல் செய்வதால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. சரும செல்களை புதுப்பிக்கிறது.
Image Source: istock
வழக்கமாக செய்து வருவதால் சரும பிரச்சனைகள் காணாமல் போய் விடும். முகப்பருக்கள், வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும். சாலிசிலிக் அமிலம் கொண்ட க்ரீம்களை பயன்படுத்தி முகப்பருக்களை குறைக்கலாம்.
Image Source: istock
ஃபேஷியல் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்க முடியும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சருமத்தை சுத்தம் செய்கிறது.
Image Source: istock
சருமம் வயதாகும் போது சரும சுருக்கங்கள், கோடுகள் மற்றும் வயதான அறிகுறிகள் தோன்றலாம். கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. சருமத்தை மிருதுவாக்குகிறது.
Image Source: istock
ஃபேஷியல் செய்வதன் மூலம் உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யலாம். அமைதியான உணர்வை தருகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Image Source: istock
ஃபேஷியல் செய்வதன் மூலம் இறந்த சரும செல்களை நீக்க முடியும். இது நிறத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் ஒளிரும் சருமத்தை நீங்கள் பெற முடியும்.
Image Source: istock
வழக்கமாக ஃபேஷியல் செய்வதால் முகழகு மட்டுமல்ல உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. நீங்கள் அழகாக தெரிவதால் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.
Image Source: istock
ஃபேஷியல் செய்வது குறித்து அழகுக்கலை நிபுணரிடம் நீங்கள் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். உங்கள் சருமத்தின் தன்மை மற்றும் சரும நிலைமை அடிப்படையில் ஆலோசனை பெறலாம்.
Image Source: istock
Thanks For Reading!